’இறுக்கமான உடை அணியச் சொல்லி கணவரும், மாமியாரும்’..!! விவகாரத்து பெற்ற நடிகையின் பேட்டியால் பரபரப்பு..!!

இறுக்கமாக உடை அணியச் சொல்லி தனது கணவர் அறைந்ததாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.


இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை கரீனா கபூர். இவரின் சகோதரி கரிஷ்மா கபூர். இவரும் பிரபல நடிகை ஆவார். இவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து சில ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்றார். இருப்பினும் இவர்களுக்கு சமீரா, கியாரா ராஜ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர், மாமியார் மீது கரிஷ்மா கபூர் வரதட்சணை வழக்கு ஒன்றையும் முன்னர் தொடர்ந்திருந்தார்.

’இறுக்கமான உடை அணியச் சொல்லி கணவரும், மாமியாரும்’..!! விவகாரத்து பெற்ற நடிகையின் பேட்டியால் பரபரப்பு..!!

இந்நிலையில் தற்போது அந்த வேதனையான சம்பவங்களை நினைவுப்படுத்தி கரிஷ்மா கபூர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அப்பேட்டியில், “திருமணத்திற்கு முன்பு எனது மாமியார் பரிசாக ஒரு உடையை வாங்கிக் கொடுத்தார். எனக்கு ஒரு மகன் பிறந்த பிறகு நான் கொஞ்சம் குண்டாகி விட்டேன். அப்போது, என் மாமியார் பரிசாக அளித்த உடையை என் கணவர் அணிய சொன்னார். அந்த உடை எனக்கு ரொம்பவே இறுக்கமாக இருக்கிறது… அணிய முடியாது என்றேன். உடனே என்னை அவர் ஓங்கி அறைந்தார். என் மாமியாரையும் அழைத்து என்னை அறைய சொன்னார். இப்படி எத்தனையோ பிரச்சனைகள் என் வாழ்வில் இடம்பெற்றது. இதன் நடுவில்தான் எங்கள் விவாகரத்து நடந்தது” என்று கண்கலங்கியவாறு கூறினார்.

CHELLA

Next Post

ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்துக்குள்ளானது எப்படி? கார் தீப்பிடித்து எரியும் காட்சிகள்...

Fri Dec 30 , 2022
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ரிஷப் பந்த் , டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானதில், கார் தீப்பிடித்து. காரில் இருந்து ரிஷப் பந்த் உடனே வெளியேறியதால் காயத்துடன் […]
a0ff90334ab3c4e12070312969234b0b1672370641475344 original

You May Like