சமூகவலைதளங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், ஒரு நபர் தனது மனைவியை தாக்குவதை பார்க்க முடிகிறது.. இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்யும் அவர் மகள், உதவி கேட்டு அழுகிறாள். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் விக்ரம் ரூபாலி என அறியப்படுகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள சஹாரகஞ்ச் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண், வீட்டுச் செலவுகளையும் மகளின் படிப்பு செலவையும் சமாளிக்க வீட்டிலிருந்தே ‘பேயிங் கெஸ்ட்’ (PG) வசதியை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.. ஆனால், அவரது கணவரும் மாமியாரும் இந்த PG-ஐ மூட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதாகவும், அதை மூடிவிட்டால் தாய்–மகளுக்கு எந்த வருமானமும் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
வீடியோவில், அந்தப் பெண் மீண்டும் மீண்டும் கொடூரமாக தாக்கப்படுகிறார்; மேலும் ஷூவை வைத்து கொடூரமாக தாக்குவதையும் பார்க்க முடிகிறது.. அருகில் நின்ற மகள் அழுகையுடன் தாயை காப்பாற்ற முயற்சிக்கிறதும் கேட்கப்படுகிறது.
அதிர்ச்சி வீடியோவுடன் சேர்த்து, இன்னொரு கிளிப் வெளியாகியுள்ளது. அதில், அந்தப் பெண் நேரடியாக உதவி கேட்டு பேசுகிறார். அதில் பேசும் அவர் “டிசம்பர் 5-ஆம் தேதி, என் கணவர் விக்ரம் ரூபாலி என்னையும் என் மகளையும் தொந்தரவு செய்தார். சுமார் 15 நாட்களுக்கு முன்பு, அவர் எங்கள் உடைகளை கிழித்து எங்களை வீட்டிலிருந்து துரத்தி விட்டார். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்..
இந்தக் குற்றச்சாட்டு, குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்சினை பல வாரங்களாக நீடித்து, நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது.
அந்த நபர் ஹச்ரத்கஞ்ச் பகுதியில் ‘ருபானி பிரதர்ஸ்’ என்ற கோழிக் கடையை நடத்தி வருகிறார் என அண்டை வீட்டார் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதும், உத்தரப் பிரதேச மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு (Women and Child Security Organisation) உடனடியாக பதிலளித்தது. அவர்கள் லக்னோ போலீசை X-இல் டேக் செய்து,
“இவ்வழக்கை கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கவும்” என கேட்டுக்கொண்டனர்.
Read More : தேசிய மனநல உதவி எண்ணுக்கு 1 நிமிடத்திற்கு 2 அழைப்புகள் வந்தன: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்..!



