கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த வேலம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அஸ்வினி ராஜ் மாடர்ன் ரைஸ் மில்லில், பீகார் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்குத் தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் தங்கி வேலை செய்து வந்த கிரண் என்ற பீகார் பெண், கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
அப்போது, அவருடன் பணிபுரியும் முகேஷ் என்பவருடன் கிரணுக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கிரணுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பிய அவரது கணவர் ராஜா சுகன், மனைவியை தேடி அந்த ரைஸ் மில்லுக்கு வந்து, அங்கேயே வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனால், கிரண் மற்றும் முகேஷால் முன்பு போல சுதந்திரமாகப் பழக முடியாமல் போனது.
இதனால், தனது கள்ளக்காதல் உறவுக்கு தடையாக இருந்த கணவர் ராஜா சுகனைக் கொலை செய்ய, கிரண் தனது கள்ளக்காதலன் முகேஷுடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ராஜா சுகனை, கிரண் தனது கள்ளக்காதலன் முகேஷுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளார்.
பிறகு, இருவரும் சேர்ந்து சடலத்தை அருகில் உள்ள மாந்தோப்பில் வீசியுள்ளனர். காலையில் உடலைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், ராஜா சுகனை கொலை செய்தது அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் முகேஷ் என்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் தலைமறைவான நிலையில், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கிரணை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : கார் ரேஸில் மீண்டும் மிரட்டிய அஜித்..!! ஸ்பெயின் பந்தயத்தில் ஏ.கே. ரேசிங் அணி சாதனை..!!