திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள புள்ளமங்கலம் ஊட்டியாணி காலனி தெருவை சேர்ந்தவர் ரமேஷ். கூலி தொழிலாளியான இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு வினித் (24), விக்ரம் (22) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். சம்பவம் நடந்த நாளில், இரவு நேரம். வீட்டில் மூத்த மகன் வினித் டிவி பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், ரமேஷ் மது அருந்திய நிலையில் வாசலில் அமர்ந்திருந்தார்.
அப்போது, செல்வி அவருக்குச் சாப்பாடு கொடுத்து, பின்னர் வீட்டு பின்புறத்தில் காயவைத்த துணிகளை எடுக்க சென்றார். அங்கே சென்று, மனைவியை படுக்கைக்கு வர அழைத்துள்ளார். “மகன் சாப்பிடாமல் இருக்கிறான். அவனுக்கு சாப்பாடு போடணும்” என்று கூறி செல்வி மறுப்பு தெரிவித்தார். ரமேஷ், செல்வியை வலுக்கட்டாயமாக படுக்கைக்கு அழைத்த நிலையிலிம் செல்வி மறுப்பு தெரிவித்ததால் மகன்கள் முன்னிலையிலே பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் செய்வதறியாது திணறிய செல்வி கத்தி கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் அவரின் கழுத்தில் இருந்த தாலி கயிற்றைப் பயன்படுத்தி கழுத்தை இறுக்கி, கொடூரமாகக் கொலை செய்து விட்டுள்ளார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திறண்டதும் ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்த அவர்கள், ரமேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் புள்ளமங்கலம் பகுதியை உலுக்கியுள்ளது. மது நாசத்தையும், குடும்ப வன்முறையின் மோசமான உருவத்தையும் காட்டும் இச்சம்பவம், சமூக சிந்தனையாளர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜயபாஸ்கர் முதலமைச்சர் ஆகலாம்..!! – இபிஎஸ் பரபரப்பு பேச்சு