ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஜோதி குமாரிக்கு திருமணமாகிவிட்டது. ஆனாலும், அவருக்கு ஹர்வா மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் சுமித் குமாருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில், இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் கள்ள உறவு ஜோதியின் கணவருக்குத் தெரியவந்த நிலையில், அவர் இருவரையும் எச்சரித்துள்ளார். ஆனாலும், அவர்களின் கள்ள உறவு தொடர்ந்து நீடித்துள்ளது. இந்த நிலையில், சுமித் குமாருக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடந்ததால், ஜோதிக்கும் சுமித்துக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது.
இதற்கிடையே, சம்பவத்தன்று இருவரும் பன்பூர்வா கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சந்தித்துள்ளனர். அங்கு அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் நிலைமை மோசமானது. அப்போது ஆத்திரமடைந்த சுமித், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிறகு, சுமித் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, அவ்வழியாக சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசர், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : பெண்களே உஷார்..!! சுற்றிவளைக்கும் நிர்வாண கும்பல்..!! பீதியில் உறைந்துபோன கிராமம்..!!