தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் காமா ரெட்டி கூடா பகுதியில் இடம்பெற்ற ஒரு கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான சுவாதி என்பவர், மகேந்தர் ரெட்டி என்ற இளைஞருடன் காதலித்து கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தார். சமீபத்தில், சுவாதி கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, கோபத்தின் உச்சத்தில் சென்ற மகேந்தர் ரெட்டி, தனது கர்ப்பிணியான மனைவியை கத்தியால் வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலை துண்டுத் துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் சுருட்டி, அருகிலுள்ள ஆற்றில் வீசியுள்ளார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து, பிளாஸ்டிக் பைகளில் இருந்த மனித உடல் பாகங்களை கைப்பற்றி, மகேந்தர் ரெட்டியை கைது செய்தனர். மகேந்தர் ரெட்டி மற்றும் சுவாதி இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில், சுவாதி கர்ப்பம் குறித்து மகேந்தர் ரெட்டிக்கு விருப்பம் இல்லாமல் இருந்ததாகவும், பிறகு ஏற்பட்ட தகராறே இந்த கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Read More : வடமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர்..? தமிழ்நாட்டில் முதல்முறையாக கணக்கெடுப்பு பணி..!!