கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சரல் குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயேஷ் ராஜப்பன் (25) – ராஷ்மி (23) தம்பதி. இவர்கள் இருவரும் திருமணம் செய்வதற்கு முன்பே காதலித்தபோது, ஜெயேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, இருவரும் தங்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், பொருளாதார நெருக்கடியால், சொகுசு வாழ்க்கைக்காக இவர்கள் ஒரு கொடூர திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் ராஷ்மியின் கணக்கை பயன்படுத்தி, ஆண்களை குறிவைத்த தம்பதியினர், ராஷ்மி மூலம் அவர்களுடன் நெருக்கமாகப் பேசி, வீட்டுக்கு அழைத்துள்ளனர். வீட்டிற்கு வரும் ஆண்களுடன் ராஷ்மி உல்லாசமாக இருப்பதை ஜெயேஷ் மறைந்து இருந்து வீடியோ எடுத்துள்ளான். பின்னர், அந்த வீடியோவை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.
ஆனால், இவர்களின் கொடுமை அத்துடன் நிற்கவில்லை. பணம் கொடுக்க மறுத்த இளைஞர்களை, ஜெயேஷ் இரும்புச் சங்கிலி, ஸ்டேபிளர் பின்கள் போன்றவற்றை வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். சிலரை அவர்களின் அந்தரங்க உறுப்புகளில் ஸ்டேபிளர் பின்களால் குத்தியுள்ளதாகவும், சிலருடன் போலி உடலுறவு காட்சிகளை படமாக்கி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் 19 வயது மற்றும் 29 வயது இளைஞர்கள் இருவரும் இந்த தம்பதியினரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர். பின்னர், அந்த இளைஞர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், பத்தனம்திட்டா போலீஸ் சிறப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, ஜெயேஷ் மற்றும் ராஷ்மி இருவரையும் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் மீது தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Read More : கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை மனைவிக்கு அனுப்பிய கணவன்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!