பீகார் மாநிலத்தில் அரங்கேறிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்காதலை தொடர்வதற்காக, தனது கணவனான மருத்துவரை அவரது மனைவியே கழுத்தறுத்துக் கொலை செய்திருப்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முராரி என்ற மருத்துவருக்கு திருமணமாகி, குமாரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், மருத்துவர் முராரியின் உடல், அப்பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
பின்னர், காவல்துறையினரின் சந்தேகம் முராரியின் மனைவி குமாரி மீது திரும்பியது. இதையடுத்து, உடனடியாக அவரை கைது செய்து விசாரித்தபோது, அவர் தனது கள்ளக்காதலனான பிரின்ஸ் என்பவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்து, உடலை புதரில் வீசியதை ஒப்புக்கொண்டார்.
இந்தக் கொலையில் உடந்தையாக இருந்த பிரின்ஸ், முராரியின் மருத்துவமனையிலேயே பணியாளராக வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முராரியின் மனைவி குமாரிக்கும், பிரின்ஸுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது உறவு குறித்து தெரிந்துகொண்ட மருத்துவர் முராரி, மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும், கள்ளக்காதலை கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரி, கள்ளக்காதலன் பிரின்ஸை வரவழைத்து, தனது கணவர் முராரியை கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், உடலை யாருக்கும் தெரியாமல் புதரில் வீசியுள்ளார். இதையடுத்து, குமாரி மற்றும் பிரின்ஸ் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



