மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் மருத்துவத் துறையில் பணியாற்றி வந்தவர் ஏக்நாத் சிங் (35). இவரது மனைவி அதிதி (32). இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்ற கனவில், வருமானம் லட்சக்கணக்கில் இருந்தும், மிகைப்படுத்தப்பட்ட சிக்கனத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், குழந்தை பாக்கியமின்மை, கணவரின் அதீத பணச் சேமிப்பு ஆகியவற்றால் அதிதி தனிமையிலும் வெறுப்பிலும் மூழ்கினார்.
ஏக்நாத், “மருத்துவமனை கட்டி முடித்த பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறி, 7 ஆண்டுகளாக குழந்தை பற்றிய பேச்சையும், பாலியல் உறவையும் கூடத் தவிர்த்து வந்துள்ளார். கணவரின் தொடர்ச்சியான புறக்கணிப்பால் ஏற்பட்ட தனிமையின் காரணமாக, அதிதி தான் பணிபுரியும் மருத்துவமனையில் தன்னைவிட இளையவரான ஹேமந்த் (28) என்ற மருத்துவருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.
ஏக்நாத் வேலைக்குச் சென்ற நேரங்களில், அதிதி ஹேமந்தை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இந்தத் துரோகத்தின் உச்சமாக, அவர் ஒரு செயற்கை ஆணுப்பை வாங்கி அலமாரியில் மறைத்து வைத்துள்ளார். கடந்த மாதம் ஏக்நாத் அலமாரியில் எதார்த்தமாக ஒரு பொருளை தேடியபோது, அந்தச் செயற்கை ஆணுப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதிதியை மிரட்ட, பயந்துபோன அதிதி, ஹேமந்துடன் தான் காதலிப்பதாக மனமுடைந்து கூறிவிட்டார்.
இதனால், கடும் கோபமடைந்த ஏக்நாத், அதிதியை கடுமையாகத் தாக்கியதில் அவர் முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடன் மயங்கி விழுந்தார். பின்னர், ஏக்நாத் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மயக்கம் தெளிந்த அதிதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அதிதியின் புகாரின் பேரில் போலீசார் உடனடியாக ஏக்நாத் சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read More : ஓய்வு காலத்தில் உங்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் வேண்டுமா..? அப்படினா இந்த மாதிரி பிளான் பண்ணுங்க..!!



