அன்பாக பேசி மனைவியின் கள்ளக்காதலனை தனியாக அழைத்துச் சென்ற கணவன்..!! பதறியடித்து ஓடிவந்த பரபரப்பு சம்பவம்..!!

Sex 2025

சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் 28 வயதான அன்பு கணபதி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜதுரை என்பவரின் மனைவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து இரு குடும்பத்தினருக்கும் தெரியவந்த நிலையில், கடும் சண்டை நடந்துள்ளது. பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில், இனி மதுவுடன் பேசக் கூடாது என அன்பு கணபதியை கண்டித்து அனுப்பியுள்ளனர்.


இதற்கிடையே, ராஜதுரை தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கோபத்தில் மனைவி வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், இதற்கு அன்பு கணபதிதான் காரணம் என ராஜதுரை நினைத்துள்ளார். இதையடுத்து, அவரை தீர்த்துக் கட்டவும் முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நடந்த அனைத்தையும் மறந்துவிட்டதாக அன்பு கணபதியிடம் அன்பாக பேசி அவரை ராஜதுரை அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, போதை தலைக்கு ஏறிய நிலையில், மீண்டும் கள்ளக்காதல் விவகாரம் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராஜதுரை, தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து அன்பு கணபதியின் கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதையடுத்து, பலத்த காயங்களுடன் ஓடிய அன்பு கணபதியை அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து, துரைப்பாக்கம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்த ராஜதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : இன்ஸ்டாவில் அறிமுகமான இளம்பெண்ணுடன் லிவிங் டு கெதர்..!! ரகசிய உறவால் ஆற்றில் மிதந்த சடலம்..!! செல்ஃபியால் சிக்கிக் கொண்ட காதலன்..!!

CHELLA

Next Post

விமானக் கடத்தலா? ஏர் இந்தியா விமானத்தில் பயணி செய்த செயலால் பரபரப்பு..

Mon Sep 22 , 2025
பெங்களூருவிலிருந்து வாரணாசிக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணி ஒருவர், விமானி அறைக் கதவை வலுக்கட்டாயமாகத் திறக்க முயன்றதால், பாதுகாப்பு பயம் ஏற்பட்டது. விமானக் கடத்தல் முயற்சி நடந்ததாக விமானி சந்தேகித்து உடனடியாக பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தகவல் அளித்தார். விமானம் வாரணாசி விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வரை விமானக் குழு உறுப்பினர்கள் அந்த நபரை தடுத்து வைத்தனர்.. மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) பணியாளர்கள் அந்த […]
cockpit png 1

You May Like