சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும், 22 வயதான கார்த்திகா தேவிக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. துபாயில் பணிபுரியும் கண்ணன், தனது மனைவியுடன் இரண்டு மாதங்கள் அங்கு உல்லாசமாக சுற்றுப்பயணம் செய்துவிட்டு, அவரை சேலத்தில் உள்ள குடும்பத்துடன் விட்டுச் சென்றார்.
பின்னர், கண்ணன் மீண்டும் பணி நிமித்தமாக துபாய் செல்ல, தனிமையில் இருந்த கார்த்திகா தேவி, தனது கல்லூரி காதலனான வருண் என்பவருடன் மீண்டும் பேசத் தொடங்கினார். நாளடைவில், இது கள்ளக்காதலாக மாறியது. மேலும் கார்த்திகா, வருணின் வீட்டுக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதில் உச்சகட்டமாக, வருணின் குடும்பத்தினரும் இந்தச் சட்ட விரோத உறவுக்குத் துணை போயுள்ளனர்.
ஒரு கட்டத்தில், கார்த்திகா திடீரென காணாமல் போகவே, கண்ணனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கார்த்திகா வருணுடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது. வருணை விசாரித்தபோது, கள்ளக்காதல், குடும்பத்தினரின் ஆதரவு உட்பட அனைத்து உண்மைகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
ஆனால், இங்குதான் சிக்கல் எழுந்தது. கார்த்திகா தேவி மற்றும் வருண் ஆகிய இருவரும் மேஜர் என்பதால், “அவர்கள் விருப்பப்படி செல்லட்டும்” என்று கூறி, காவல்துறையினர் கார்த்திகாவை வருணுடன் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. கண்ணனின் உறவினர்கள் சத்தம் போட்டு ஆட்சேபனை தெரிவித்தபோது, காவல்துறையினர் அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குப் பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.



