உலகம் தோன்றியது முதல் இன்று வரை மனிதகுலம் எண்ணற்ற பரிணாமங்களை எதிர்கொண்டுள்ளது. கற்கால கருவிகளிலிருந்து செயற்கை நுண்ணறிவு வரை வந்துள்ளன நம் திறன்கள். தொழில்நுட்பம், அறிவியல், மருத்துவம், கல்வி ஒவ்வொரு துறையிலும் நாகரிகம் வெளிச்சம் கண்டுள்ளது. ஆனால், உலகின் இந்த ஒளி எல்லா மூலைகளிலும் சமமாகப் பரவியிருக்கிறதா? என்றால் இல்லை.
நாகரிகத்தின் பாதையில் மிக முன்னேறிய நாடுகளுக்குப் பல ஆயிரம் மைல் தூரத்தில், இன்னும் கற்கால வாழ்க்கையைப் போலவே பழக்கவழக்கங்களைப் பிடித்து நிற்கும் சமூகங்கள் உள்ளன. நமீபியாவில் வாழும் ஹிம்பா (Himba) பழங்குடி மக்கள் அதற்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டு. சுமார் 50,000 பேர் வாழும் இந்த சமுதாயம், உலகம் மாறினாலும் மரபுகள் மாறக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறது.
இவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் நவீன உலகின் கண்ணோட்டத்தில் வியப்பையும், அதிர்ச்சியையும் எழுப்புகின்றன. இந்த பழங்குடியினரில் குளிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.. இவர்கள் தண்ணீரில் குளிப்பதற்குப் பதிலாக, புகைப் போட்டுக் குளிப்பார்கள். இது புகை குளியல் என்று அழைக்கப்படுகிறது. பழங்குடி மக்களைப் போலவே, உணவைத் தேடி தங்கள் நாள் முழுவதும் செலவிடுகிறார்கள். இது தவிர, இந்த பழங்குடியினர் ஒரு விசித்திரமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனர்.
அதாவது வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அவ்வீட்டு பெண்களுடன் உடலுறவு கொள்ள வேண்டும். இதுதான் அந்த வழக்கம். இது “wife sharing tradition” என அழைக்கப்படுகிறது. இந்த நடைமுறை விருந்தோம்பல் மரபாக கருதப்படுகிறது. ஒரு விருந்தாளி வீட்டுக்கு வந்தால், அந்த வீட்டின் கணவன் அவனுக்கு தன் மனைவியை இரவு விருந்தளிப்பதால், உறவு நெருக்கமாகுமாம்.
Read more: பாக்டீரியாவை வைத்து புற்றுநோய் சிகிச்சை.. இனி கதிர்வீச்சு சிகிச்சை தேவையில்லை!



