மறைந்த முதல்வர் ஜெயலலிதா மகள் என உரிமை கொண்டாடி கேரள பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்..
எம்ஜி.ஆர் ஜெயலலிதாவுக்குப் பிறந்த மகள் என்று கூறி கேரளாவை சேர்ந்த சுனிதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.. இந்த அடிப்படையில் அவர்களின் சொத்துகளில் எனது பங்கிற்கான உரிமையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ நான் தான் ஜெயலலிதா – எம்.ஜி.ஆருக்கு பிறந்த மகள்.. டிஎன்.ஏ பரிசோதனை செய்ததில் நான் ஜெயலலிதாவின் மகள் என தெரியவந்தது.. சூழ்நிலை காரணமக நான் ரகசியமாக வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வப்போது போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று ஜெயலலிதாவை பார்ப்பேன்.. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. பிரதமர் மோடியிடம் மனு அளிக்க உள்ளேன்..” என்று தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மகள் என்று பெண்கள் உரிமைக் கோருவது இது முதன்முறை அல்ல.. கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.. அதே போல் ஜெயலட்சுமி என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று உரிமைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : AI மூலம் ஆபாச வீடியோ.. இணையத்தில் வெளியிட்டு வருமானம் ஈட்டிய இளைஞன் கைது..!!