பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 11-வது ஜெயந்தி மற்றும் குரு பூஜையை ஒட்டி நேற்று முன் தினம் ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் 3 பேரும் கூட்டாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.. இதை தொடர்ந்து மூன்று பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது அதிமுகவை ஒன்றிணைக்க மீண்டும் சபதம் எடுத்துள்ளதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதிப்பூண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்..
இதையடுத்து நேற்று அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்..
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று கோபிச்செட்டிபாளையம் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது எடப்பாடி பழனிசாமி மீது அவர் அடுக்கடுக்கன குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. மேலும் “ இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இபிஎஸ்..
கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் அந்த கருத்துகளை தெரிவித்தோம். கட்சி வலிமையாக இருக்க வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் எனது கருத்துகளை தெரிவித்தேன்.. அதிமுக தொண்டர்களின் மனதை புரிந்துகொண்டு கட்சி இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்..
எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தேவர் ஜெயந்தி தினத்தில் அனைவருடனும் பேசினேன்.. தேவர் ஜெயந்திக்கு சென்ற போதும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசினேன். அதற்கு கிடைத்த பரிசு தான் அதிமுகவில் இருந்து நீக்கம்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களோடு நான் பேசியது உண்மை தான்..
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குரல் கொடுக்காதது ஏன்? திமுகவின் பி டீம் யார் என்பது அனைவருக்கும் தெரியும்.. இபிஎஸ் தான் திமுகவின் பீ டீமாக செயல்படுகிறார். என்னை பொறுத்தவரை நான் பீ டீமில் இல்லை.. அவர் தான் கோடநாடு வழக்கில் ஏ1 ஆக இருக்கிறார்.. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை பற்றி பேசும் பொறுப்பு எடப்பாடிக்கு தான் இருக்கிறது.. ஆனால் அவர் ஏன் அதை பற்றி பேச மறுக்கிறார்..” என்று கேள்வி எழுப்பினார்..
Read More : ”துரோகத்திற்கான நோபல் பரிசு EPS-க்கு தான் கொடுக்க வேண்டும்.. அவ்வளவு துரோகம்..” செங்கோட்டையன் அட்டாக்..



