“நான் ரெடி”..!! அதிமுகவில் மீண்டும் இணையும் முக்கியப் புள்ளி..!! குஷியில் எடப்பாடி பழனிசாமி..!!

KC Palanisamy Eps 2025

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். குறிப்பாக, மாற்றுக்கட்சியினரை அதிமுக-வில் இணைப்பதிலும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைப்பதிலும் அதிமுக தலைமை தீவிரம் காட்டி வருகிறது.


இந்தச் சூழலில், அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி மீண்டும் கட்சியில் இணையப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இது குறித்த சர்ச்சைகளுக்கு அவரே தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமை தன்னிடம் இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும், கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தலைமை தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என தான் எதிர்பார்ப்பதாக அவர் வெளிப்படையாக கூறினார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் கனவு குறித்துப் பேசிய கே.சி. பழனிசாமி, “எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற லட்சியத்தில் உறுதியாக இருந்தால், அவர் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். தற்போது சிதறிக் கிடக்கும் அதிமுக-வின் பல்வேறு அணிகளையும், பிரிந்து சென்ற முக்கிய நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து ஒரே மேடையில் நிறுத்த வேண்டும். அவ்வாறு ஒருங்கிணைந்த பலத்துடன் தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும்” என்று தனது ஆலோசனையை தெரிவித்துள்ளார்.

Read More : FLASH | அதிகாலையிலேயே அதிர்ச்சி..!! தமிழக மீனவர்கள் அதிரடி கைது..!! படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை அடாவடி..!!

CHELLA

Next Post

பெண்களுக்கு ஜாக்பாட்..!! மகளிர் உரிமைத்தொகை பணம் எப்போது உயரும்..? வெளியான செம குட் நியூஸ்..!!

Sun Dec 28 , 2025
தமிழக அரசின் முத்திரை பதித்த திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, இன்று சுமார் 1.30 கோடி பெண்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. மாதம் தோறும் தடையின்றி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் 1,000 ரூபாய், சாமானிய பெண்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகள் வாங்குவது முதல் மருத்துவச் செலவுகள் மற்றும் சிறு சேமிப்புகள் வரை பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பங்கள், […]
Magalir Urimai Thogai 2025

You May Like