சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 51 வயதான சுரேந்தர், ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருப்பதுடன், பாஜகவின் சென்னை கிழக்கு மாவட்ட துணைத் தலைவராகவும் இருந்து வருகிறார். குடும்பப் பிரச்சனைகளால் தனது மனைவியை விட்டு விலகியிருக்கும் இவர், கட்சி தொடர்பான பணியின் போது சாலிகிராமத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரியதர்ஷினியின் கணவர் உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாதவராக இருந்தார். குடும்பச் செலவுகளை சமாளிக்க சுரேந்தர் அவ்வப்போது அவருக்கு பண உதவிகளை செய்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த சில மாதங்களில் சுரேந்தர் அவருக்கு சுமார் ரூ.50,000 வரை வழங்கியிருக்கிறார்.
இந்நிலையில், சுரேந்தர் மதுபோதையில் நள்ளிரவில் சாலிகிராமத்தில் உள்ள பிரியதர்ஷினியின் வீட்டின் கதவை பலமாக தட்டியுள்ளார். பிரியதர்ஷினியை வெளியே வரச் சொல்லி கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், வீட்டில் இருந்த கணவர் மற்றும் மகன் கதவை திறந்து, சுரேந்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சுரேந்தர் ‘நீ என் கள்ளக்காதலி.. உனக்கு என் பணம் மட்டும் வேண்டும், நீ நான் அழைத்தால் வரமாட்டியா..?’ என்று கேட்டு சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். அப்போது, பதற்றமடைந்த பிரியதர்ஷினி, தங்களின் கள்ளத்தொடர்பை தனது கணவரிடம் சுரேந்தர் சொல்லிவிடுவாரோ என்ற பயத்தில், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து, சுரேந்தரை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த சுரேந்தர், உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 31 தையல்கள் போடப்பட்டுள்ளன. இச்சம்பவம் சம்பவம் தொடர்பாக விரும்பாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியதர்ஷினியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
Read More : நடக்கும்போது இந்த பிரச்சனை இருக்கா..? நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் இதுதான்..!! தாமதிக்காதீங்க..!!