வேலைக்காக துபாய் சென்ற கணவன் நீண்ட நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் மாமனாருடன் உல்லாசமாக இருந்து வரும் இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரலாக பரவும் 31 வினாடி வீடியோவில் இளம்பெண் தனது அறைக்குள் அமர்ந்தபடி செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டு தன் வாழ்க்கை கதையை விளக்குகிறாள். “என் மகள் மிகவுன் சிறியதாக இருக்கும்போது என் கணவர் என்னை விட்டு சென்றார். நான் அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் நீண்ட காலம் காத்திருந்தேன். ஆனா, அவர் ஒருபோதும் திரும்பி வரவில்லை. “நான் இப்போது என் மாமனாரோடுதான் வாழ்கிறேன் என்று வெளிப்படையாக அப்பெண் கூறியதை கேட்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் வீடியோவில், அந்தப் பெண், “நான் என் மாமனாருடன் வாழ ஆரம்பித்துவிட்டேன். அதில் என்ன தவறு? நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி அங்கேயே வாழ ஆரம்பித்துவிட்டோம். எனது தொலைபேசியில் எனது கணவரின் அனைத்து ஐடிகளையும் நான் பிளாக் செய்துவிட்டேன். அவர் என்னை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் பிளாக் செய்திருந்தார். இப்போது அவரால் எனது வீடியோக்களை அணுக முடியாது. இப்போது நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்று கூறுகிறார். வீடியோவின் முடிவில் மாமனாரின் கன்னத்தை கிள்ளுவதையும் காணலாம். கணவர் பிரிந்த பிறகு தனது மாமனாருடன் வசிக்கும் ஒரு பெண்ணின் இந்த வீடியோ ஏற்கனவே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. நெட்டிசன்கள் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.