சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் நிரூபன் என்ற இளைஞக்கும், இளம்பெண் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், புதுச்சேரிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனால், நண்பர்களுடன் வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, அந்தப் பெண் நிரூபனுடன் பைக்கில் புதுச்சேரிக்கு கிளம்பினார்.
பயணத்தின்போது நிரூபன் மது போதையில் இருந்ததை அவர் கவனிக்கவில்லை. ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்துத் தங்கிய இருவரும், பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பிறகு, நிரூபன் தனது நண்பரை அந்த அறைக்கு வரவழைத்துள்ளார். காவல்துறையின் விசாரணையில், நிரூபன் தனது காதலியை நண்பருக்கு வாடகைக்கு விட ஒப்பந்தம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சதித்திட்டத்திற்காகவே அந்தப் பெண்ணை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அறையில் தனது நண்பனுடன் உல்லாசமாக இருக்க சொல்லி நிரூபன் காதலியை வற்புறுத்தியபோது, அந்தப் பெண் எதிர்த்துள்ளார். அப்போது, இருவரும் அந்த இளம்பெண்ணை அடித்து, உதைத்து, சித்திரவதை செய்து மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், இந்த போராட்டத்தில், அந்தப் பெண்ணை இருவரும் தள்ளிவிட, அவரது தலை அறையில் உள்ள ஸ்லாப் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால், அதிர்ச்சி அடைந்த காதலனும், அவரது நண்பனும் பயந்துபோய் அந்தப் பெண்ணை விட்டுள்ளனர். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட அந்தப் பெண், ஒரு வழியாக அங்கிருந்து தப்பி, அருகிலிருந்த ஆரோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரின் தலையில் பலத்த காயமடைந்ததால், தற்போது மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அந்த இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ஆரோவில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளான நிரூபனையும், அவரது நண்பரையும் தேடி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.