பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பெலத்தூர் பகுதியில், கடந்த 2023 ஜூலை 9ஆம் தேதி சாக்கடை அடைப்பை சரி செய்ய வந்த தொழிலாளி கண்டெடுத்த மனித உடல், ஒரு கொடூரமான பழிக்குப் பழி கொலைச் சம்பவத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் பீகாரைச் சேர்ந்த பான் மசாலா வியாபாரி ஓம்நாத் சிங் (48) என அடையாளம் காணப்பட்டது. விசாரணையில், ஓம்நாத் சிங், தனது பக்கத்து வீட்டில் வசித்த விஷால் (25) மற்றும் ரூபி (24) என்ற இளம் தம்பதியருக்கு ரூ.3 லட்சம் வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளார்.
கடன் தொகையை விஷால் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், மது போதையில் இருந்த ஓம்நாத் சிங், “உன் மனைவி ரூபியை என்னிடம் அனுப்பி வைத்தால் கடனை தள்ளுபடி செய்கிறேன்” என்று கோரினார். பணம் மற்றும் அவமானத்தின் உச்சத்தில் இருந்த விஷால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மனைவியை சம்மதிக்க வைத்து, ஓம்நாத் சிங்குடன் அனுப்பி வைத்தார்.
ஓம்நாத் சிங், மாதம் ஒரு லட்சம் ரூபாய் என்ற பேரில், 3 மாதங்கள் விஷாலின் மனைவி ரூபியைத் தன் வீட்டில் அடைத்து வைத்து, நேரம் காலம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உறவு கொண்டு சித்திரவதை செய்து வந்துள்ளார்.
ஒரு நாள், தன் மனைவிக்கு மோசமான ஆடை அணிவித்து ஓம்நாத் சிங் நாசம் செய்துகொண்டிருப்பதை ஜன்னல் வழியாக விஷால் நேரில் கண்டார். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்ட விஷால், ரூபியுடன் சேர்ந்து பழிவாங்க ஒரு கொடூரமான திட்டத்தை தீட்டினான். வெளியூர் செல்வதாக ஓம்நாத்திடம் கூறிவிட்டுச் சென்ற விஷால், அன்றிரவு ஓம்நாத் சிங் ரூபியுடன் உல்லாசமாக இருக்க வந்தபோது, ரூபி கொடுத்த மிஸ்டு கால் மூலம் வீட்டுக்குள் நுழைந்து கதவை பூட்டினார்.
உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் இருந்த ஓம்நாத்தை இருவரும் கட்டிப்போட்டு, அடுத்த 3 நாட்களும் இரும்புக் கம்பி, பெல்ட் போன்ற பொருட்களை வைத்துச் சரமாரியாக அடித்துச் சித்திரவதை செய்தனர். “நீ என்னை 3 மாசமாக நாசம் பண்ண.. நான் உன்னை 3 நாள் நாசம் பண்ணுவேன்” என ரூபி கூறியதாக போலீஸ் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் நாள் இரவு, ஓம்நாத் சிங்கின் மனைவி குஞ்சாதேவி (35) யை சாக்குப்போக்கு சொல்லி வீட்டுக்கு அழைத்து வந்தனர். தன் கணவன் ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் காட்சியைக் கண்ட குஞ்சாதேவி அதிர்ச்சி அடைந்தார். ஓம்நாத் செய்த கொடுமைகளை விஷால் செல்போனில் காட்டவே, கோபமடைந்த குஞ்சாதேவி, “இவனுக்கு வேண்டிய தண்டனை தான். உங்கள் இஷ்டம்” என்று கூறியுள்ளார். அதன் பிறகு விஷாலும் ரூபியும் சேர்ந்து ஓம்நாத் சிங்கை கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர்.
கொலைக்குப் பின் உடலைப் பிளாஸ்டிக் பையில் கட்டி, நள்ளிரவில் விஷால் அருகில் உள்ள மேன்ஹோலில் திணித்து மூடியை மூடிவிட்டு, மூவரும் தப்பி ஓடினர். குஞ்சாதேவியின் மொபைல் சிக்னல் மூலம் மங்களூருவில் ஒரு லாட்ஜில் பதுங்கியிருந்த 3 பேரும் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
விஷால், ரூபி, குஞ்சாதேவி ஆகியோர் மீது கொலை (IPC 302), குற்றச்சதி (120B), ஆதாரங்களை அழித்தல் (201) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : “இனி வீட்டிலிருந்தபடி 10 நிமிடங்களில் பத்திரப்பதிவு செய்யலாம்”..!! தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்..!!



