பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற தலைவர், 3 முறை முதல்வர், அதிமுகவின் முக்கிய தலைவர் என ஓபிஎஸ்-ன் அரசியல் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது… ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, தர்ம யுத்தம் நடத்திய அவர், துணை முதல்வராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.. கட்சிக்கு ஓபிஎஸ், ஆட்சிக்கு என்று கூறி வந்த இபிஎஸ் ஆட்சி முடிவுக்கு வந்த போது கட்சியை கைபற்றினார்.. பின்னர் ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டே வெளியேற்றினார்.. இதை தொடர்ந்து ஓபிஎஸ், அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பை தொடங்கி பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தார்..
ஆனால் சமீபத்தில் தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் நேரம் கேட்டிருந்தார். பிரதமர் நேரம் ஒதுக்காத நிலையில், அதிருப்தியில் இருந்த ஓபிஎஸ் ஒருவழியாக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்தார்.. அவரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது..
மேலும் ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.. இதனால் அவர் திமுக கூட்டணியில் இணையக்கூடும் என்று தகவல் வெளியானது.. அதற்கேற்றார் போல, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்..
இந்த நிலையில் ஓபிஎஸ்-ன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது.. ஆனால் ஓபிஎஸ் தரப்பு பாஜகவின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம்..
பாஜகவின் துரோகங்களை பட்டி தொட்டி எங்கும் பரப்புரை செய்வது, வலிமையான ஒற்றுமையான அதிமுக தான் நல்லது, பதவிகள் கூட வேண்டாம் என்று எவ்வளவோ இறங்கி வந்தோம்… ஆனால் தன்னோட சுயநலத்திற்கா எங்களை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமியின் உண்மை முகத்தை எக்ஸ்போஸ் செய்யணும்..
அதிமுகவை முழுவதும் பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளதையும் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.. இதற்காக ஓபிஎஸ் தரப்பினர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளனர்.. அதன்படி, மாநாடு நடத்துவதற்கு பதில் மக்களை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.. மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கூட்டணி குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும்..
அதிமுகவின் கோடிக்கணக்கான தொண்டர்களுக்காக அம்மாவின் கட்சி உயிர்ப்போடு இருக்க வேண்டும் நாங்கள் பல அவமானங்களை பொறுத்துக்கொண்டோம்.. ஒற்றுமையான அதிமுகவை உருவாக்குவோம் என்று பாஜக சொன்னதால் தான் அங்கும் பல அவமானங்களையும் பொறுத்துக்கொண்டோம்..
ஆனால் என்றைக்கு ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் சொன்னாரோ, அப்போதே இவர்கள் அதிமுகவை மறந்துவிட்டனர்.. முழுவதுமாக பாஜக பக்கம் சாய்ந்துவிட்டனர். இது அதிமுக எதிர்காலத்திற்கு ஆபத்து.. எனவே இபிஎஸ், பாஜக தரப்பையும் எக்ஸ்போஸ் செய்வதே பன்னீர் செல்வத்தின் பயணம் இருக்கும் என்று ஓபிஎஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. எனினும் ஓபிஎஸ்-ன் இந்த முயற்சி எந்தளவு பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..