உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மனோஜ். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூபி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. ஆனால், அதில் ஒரு திடீர் திருப்பம் நிகழ்ந்தது. மனோஜின் மனைவி ரூபாவுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நட்பாக இருந்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், இது கள்ளக்காதலாக மாறியது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பது, செல்போனில் நீண்ட நேரம் பேசுவது, வெளியில் ரூம் போட்டு உல்லாசமாக இருப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
ஆனால், இந்த விஷயம் எப்படியோ ரூபாவின் கணவர் மனோஜுக்கு தெரியவந்துள்ளது. இதனால், ஆத்திரமடைந்த மனோஜ், மனைவியை கடுமையாக திட்டி கண்டித்துள்ளார். இதனால், இனி விஷயத்தை கேள்விப்பட்ட மனோஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால், இனி அந்த வாலிபருடன் பழக மாட்டேன்.. திருந்தி வாழ்கிறேன்.. என்னை மன்னித்து விடுங்கள்’ என்று ரூபா கூறியுள்ளார். இதை கணவரும் நம்பியுள்ளார்.
ஆனால், ஒரு கட்டத்தில் மனோஜுக்கு மீண்டும் சந்தேகம் வந்துள்ளது. இதனால், ஒருவாரம் வெளியூரில் வேலை இருப்பதாக கூறிவிட்டு, மனோஜ் சென்றுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரூபா, தனது கள்ளக்காதலனை வீட்டிற்கே வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆனால், இதை வீட்டிற்கு வெளியே இருந்து கணவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அறையை வெளியே பூட்டி விட்டு, ஊர் மக்களை அழைத்துள்ளா மனோஜ். பின்னர், இனி தன்னால் ரூபியுடன் வாழ முடியாது என்றும் அவள் அந்த வாலிபரையே திருமணம் செய்து கொள்ளட்டும் என்றும் கூறியுள்ளார். பின்னர், இருவருக்கும் திருமணம் செய்து வைத்த மனோஜ், இனி என்னுடன் அவருக்கு எந்த உறவும் இல்லை என ரூபாவிடம் எழுதி வாங்கிவிட்டு, அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவறு செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது புகார் அளிக்காமல், இருவருக்கும் திருமணம் செய்து வைத்த சம்பவம் அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.



