அஜித்குமார் நகைகளை எடுத்ததை நான் கண்களால் பார்க்கவில்லை என்று நிகிதா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார் என்ற இளைஞர் காவல்துறை விசாரணையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இந்த வழக்கில் இதுவரை 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.. வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணையும் நடந்து முடிந்துள்ளது..
இதனிடையே நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 25 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக 2011-ம் ஆண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நிகிதா பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர் “ நிறைய விஷயங்கள் என்னை பற்றி பொய்யாக பரப்புகின்றனர்.. நான் கண்டிப்பாக நகை கொண்டு வந்தேன்.. நான் நகையை கொண்டு வரவில்லை எனில், வயதான தாயை வைத்து நான் அவ்வளவு நேரம் போராட வேண்டிய அவசியம் இல்லை.. அஜித்குமார் நகைகளை எடுத்ததை நான் கண்களால் பார்க்கவில்லை.. எல்லாமே சந்தேகம் தான்..
ஆனால் யார் அடித்தாலும் மிகப்பெரிய தவறு தான்.. அஜித்தை இந்தளவுக்கு டார்ச்சர் செய்தது என்பது தேவையில்லாதது.. அவர் நகையே எடுத்திருந்தாலும், அவரை இவ்வளவு டார்ச்சர் செய்திருக்க தேவையில்லை..” என்று தெரிவித்தார்..
உயரதிகாரிகள் சொல்லி தான் தனிப்படை காவலர்கள் அடித்தார்களா என்பது யாருக்கும் தெரியாது.. நான் காவல்துறையில் புகார் கொடுத்தேன், வந்துவிட்டேன்.. கண்டிப்பாக எந்த உயரதிகாரிக்கும் நான் போன் செய்யவில்லை.. என் நம்பரில் இருந்தோ வேறு யார் நம்பரில் இருந்தும் கால் போகவில்லை.. நான் அழுத்தம் கொடுத்ததால் தான் அடித்தார்கள் என்பது அப்பட்டமான பொய்..
இவ்வளவு துன்புறுத்துவார்கள் என்று தெரிந்திருந்தால், நாம் புகாரே கொடுத்திருக்க வேண்டாம் என்று தான் என் அம்மா சொல்லி அழுது கொண்டே இருக்கிறார்.. ஒரு உயிருக்கு என்பது எதுவுமே ஈடு கிடையாது.. ஒரு உயிரிழப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளவே முடியாது..” என்று தெரிவித்தார்..
தன் மீதான பணமோசடி குறித்து பேசிய அவர் “ நான் முறைப்படி கல்விப்பயின்று டாக்டரேட் முடித்தேன்.. நீண்ட ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் எனக்கு அரசு கல்லூரியில் வேலை கிடைத்தது.. நான் பண மோசடியையும் செய்யவில்லை.. யாரையும் ஏமாற்றவில்லை.. என் மீது குற்றச்சாட்டிய பலருக்கும் நான் தான் நிகிதா யாருக்குமே தெரியாது.. என் மீது பணமோசடி புகார் வந்தது உண்மை தான்.. ஆனால் யாருமே என்னிடம் நேரடியாக பணம் கொடுத்தது கிடையாது.. கடவுள் சாட்சியாக, அவர்கள் என்னிடம் பணம் கொடுக்கவில்லை…
விவேகானந்தன், ரோஸ்லின் என்பவரிடம் தான் பணம் கொடுத்தனர். எங்கள் அண்ணிக்காக நாங்களும் அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டோம்.. ஆனால் மற்ற அனைவரும் எங்களை நம்பி கொடுத்தனர். எனவே நாங்கள் தான் பண மோசடி என்று கூறி வருகின்றனர்..” என்று தெரிவித்தார்.
Read More : அஜித்குமார் கொலை.. தடையை மீறி போராட்டம் நடத்துவேன்.. சீமான் அதிரடி..