தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலில் விஜயதரணி பெயர் இடம்பெறாத நிலையில் அதுகுறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரின் ஆதரவாளர்களுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோஷ்டி பூசலை குறைக்க அனைத்து தரப்புக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நடிகை குஷ்புவுக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2021ல் பாஜகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய கேடி ராகவனுக்கும், சசிகலா புஷ்பா, எஸ்ஜி சூர்யா, வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பலருக்கும் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்த விஜயதரணிக்கு இம்முறையும் மாநில நிர்வாகிகள் பட்டியல் இடமில்லாதது பேசுபொருளாகி இருக்கிறது.
விஜயதரணிக்கு ஏமாற்றம்: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் விஜயதரணி . காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த ஆண்டு பிப்ரவரியில் எதிர்பாரா திருப்பமாக பாஜகவில் இணைந்தார். காங்கிரஸில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர் பாஜகவுக்கு தாவினார்.
2024 மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் பொறுப்பு கூட வழங்கப்படவில்லை. இந்நிலையில் தமிழக பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலிலும் அவர் பெயர் இல்லை. இந்த சூழலில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு விஜயதரணி அளித்த பேட்டியின் போது, பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் தான் தற்போது வெளி வந்திருப்பதாகவும், தேசிய அளவிலான பட்டியலில் தனது பெயர் இடம் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
Read more: “விஜய் நினைத்தது நடக்காது..” பாஜக துணைத் தலைவர் குஷ்பு பேட்டி..! என்ன சொன்னார் தெரியுமா..?