பிரேசிலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக பதட்டங்கள் நிலவிவரும் நிலையில், பிரேசில் அதிபர் லூலா டிரம்புடன் பேச மறுப்பு தெரிவித்துள்ளார்.
பிரேசில் இறக்குமதிகள் மீது அமெரிக்கா கூடுதலாக 40% வரி விதித்துள்ளது. இதன் மூலம் மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. இது பிரேசிலின் ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பிரேசில்-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா பேசியதாவது, பிரேசில் தனது வர்த்தக நலன்களைப் பாதுகாக்க உலக வர்த்தக அமைப்பு உட்பட அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதிபர் டொனால்டு டிரம்பை அழைக்கப் போவதில்லை. அவருடன் பேச விரும்பவில்லை. நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளில் மிகவும் வருந்தத்தக்க நாள்.
அதற்கு பதிலாக பிரதமர் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களுடன் பேசுவேன். நான் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைப்பேன். புடினால் இப்போது பயணம் செய்ய முடியாததால் நான் அவரை அழைக்க மாட்டேன். ஆனால் நான் பல அதிபர்களுடன் பேசுவேன். முன்னதாக, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா உடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். பிரேசிலின் நிதியமைச்சர் பெர்னாண்டோ ஹடாட், டிரம்பின் நடவடிக்கையை வரவேற்று, அத்தகைய முடிவை எடுக்க, அதிபர் லுலா டா சில்வா தயாராக இருப்பார் என்று கூறினார். இருப்பினும், டிரம்புடன் உடன் பேச விரும்பவில்லை என அதிபர் லுலா டா சில்வாவும் தெரிவித்துள்ளார். இதன்மூலம் பிரேசில் இப்போது அமெரிக்காவிற்கு பதிலாக பிரிக்ஸ் நாடுகளுடன் இராஜதந்திர மற்றும் வணிக உரையாடலுக்கு முன்னுரிமை அளிக்கும் என்பதை குறிக்கிறது என்று ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
Readmore: நாடே பரபரப்பு!. பயங்கரவாத அச்சுறுத்தல்!. அனைத்து விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை!.