பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் பிரபலங்கள் குறித்த பல அந்தரங்க விஷயம் மற்றும் அதுதொடர்பான புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருந்தார். இது அப்போது தமிழ் சினிமா திரையுலகையே உலுக்கியது. ஆனால், தனது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துவிட்டதாக சுசுத்ரா தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது அளித்து வரும் பேட்டிகளில், தனுஷ் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
இந்நிலையில் தான், ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்றும் அவர் என் ஏமாற்றிவிட்டார் என இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கிறார். “சுச்சி லீக்ஸ்” விவகாரம் என் வாழ்க்கையில் வந்த பிறகு, இதைவிட வேறு எந்த விஷயமும் நடக்காது என நினைத்துக் கொண்டிருந்தேன். கடந்த கடந்த 2 ஆண்டுகளாக சண்முகராஜ் என்பவரை காதலித்து வருகிறேன். என்னுடைய 48-வது வயதில், கண்றாவி புடிச்ச ஒரு ரிலேஷன்ஷிப்புக்குள் மாட்டிக்கிட்டேன்.
எது எல்லாம் என்னோட வாழ்க்கையில நடக்காது நினைச்சிட்டு இருந்தேனோ, அதெல்லாம் இந்த 2 வருஷத்துல நடந்துருச்சு. ஒரு பேட்டியில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூட கூறியிருந்தேன். ஏனென்றால், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தோம். என்னுடைய வாழ்க்கையை காப்பாற்றுவது போல அவர் வந்தார்.
தனுஷ் உன் வாழ்க்கையை கெடுத்துவிட்டான், கார்த்திக்கால் உன் வாழ்க்கையே நாசமாக போனது. நானும் என் மனைவி, குழந்தைகளால் கஷ்டப்பட்டு விட்டேன். இனி நாம் இருவர் மட்டும் தான் என்று பல ஆறுதல் வார்த்தைகளை என்னிடம் சொன்னார். நானும் அவர் சொல்வது எல்லாம் உண்மை என நினைத்தேன். ஆனால், தினமும் என்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தினார். என்னிடம் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டேன் என்று சொன்னான். ஆனால், அவன் மனைவி என்னிடம் வந்து என் கணவரை என்னிடமே கொடுத்து விடு என்று கெஞ்சுகிறாள்.
நான் சேர்த்து வைத்த மொத்த பணத்தையும் அவன் சுருட்டி விட்டான். எவ்வளவு பணம் என்று சொன்னால், உங்களுக்கு தலையே சுற்றி விடும். இப்போது, சண்முகராஜா மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன். அவனிடம் ஒரு பைசாவைக் கூட விட்டு வைக்க மாட்டேன். அவன் மீது 6 கேஸ் போடப்போறேன். சென்னையில் இருக்கும் என் வீட்டில் தான் அவனும், மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறான். இன்னும் 2 வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இனி அடிக்கடி என்னை கோர்ட்டில் சந்திக்கலாம்” என்று பேசியுள்ளார்.