தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. காங்கிரஸ் கட்சியில் சிலர் மட்டும் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்..
இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல் நாளே 10,000 விருப்ப மனுக்கள் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்களால் வாங்கப்பட்டன.. கூட்டம் அதிகமாக இருந்ததால் பனையூர் பகுதியே போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது.. பனையூர் பகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் விருப்ப மனுக்கள் வாங்க நேரில் வர வேண்டாம்.. ஆன்லைனிலேயே வாங்கிக் கொள்ளலாம் என்று அக்கட்சி தலைமை அறிவித்தது..
பனையூர் அலுவலகத்தில் நேரில் வாங்கிய 10,000 பேரும், ஆன்லைன் வழியாக 40,000 பேர் என மொத்தம் 50,000 பேர் தவெகவில் விருப்ப மனுக்களை பெற்ற நிலையில் வெறும் 5,000 பேர் மனுக்களை திரும்ப அளித்தனர்..
இந்த நிலையில் தவெக வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது.. இந்த நேர்காணலின் போது தமிழக வெற்றிக் கழக தலைவர் சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.. அப்போது “ உங்கள் தொகுதியில் வெற்றி பெற வேண்டியது உங்கள் கடமை.. தேர்தலில் வெற்றி பெற முழு மூச்சாக நீங்கள் பணியாற்ற வேண்டும்.. மாவட்ட செயலாளர்கள் அவர்கள் போட்டியிடும் தொகுதி மட்டுமின்றி மற்ற தொகுதிகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.. எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்துவிட்டேன். இனி அரசியலை தவிர எனக்கு வேறு ஒன்றும் இல்லை. அரசியலுக்கு வந்த பிறகு நடப்பதெல்லாம் உங்களுக்கு தெரியும்.. எதற்கும் துணிந்து வேலை பாருங்கள்.” என்று தெரிவித்தார்.
Read More : 40 லட்சம் பேரா..? இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் கள்ள உறவு..! முதலிடத்தில் எந்த நகரம்..?



