“என் பொண்டாட்டியை விட உன்ன தான் ரொம்ப புடிச்சிருக்கு”..!! மனைவியின் தோழியை பலாத்காரம் செய்து கொன்ற ஊழியர்..!! புதுக்கோட்டையில் ஷாக்..!!

Rape 2025

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மனைவியுடன் கோவை சோமனூர் அருகே தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜெகனின் மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்த நிலையில், அங்கிருந்த ஒரு இளம் பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. மனைவி மூலம் அந்த இளம் பெண், ஜெகனுக்கு பழக்கமானார். நாளடைவில், ஜெகன் அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததால், கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.


இந்த சூழலில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜெகனின் பிறந்த நாளின்போது அந்த இளம் பெண் அவருக்கு கைக்கடிகாரத்தைப் பரிசளித்துள்ளார். அதன்பிறகு, அந்த இளம் பெண் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட ஜெகன், அவருடைய வீட்டுக்கு சென்று, தான் அப்பெண்ணை விரும்புவதாகவும், மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அவரை நிர்பந்தப்படுத்தியுள்ளார்.

ஜெகனின் ஆசைக்கு அந்தப் பெண் சம்மதிக்காமல், வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெகன், அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, எதுவும் தெரியாதது போல் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டார்.

இளம்பெண்ணின் தங்கை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, தன் அக்கா பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அந்த இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

சம்பவம் நடந்த பகுதியைச் சுற்றியுள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஜெகன் அந்த வீட்டிற்கு வந்து சென்றது உறுதியானது. இதனையடுத்து, அவரை கைது செய்து விசாரணை செய்தபோது, இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன், குற்றம் சாட்டப்பட்ட ஜெகனுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இந்தப் பரபரப்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Read More : வீட்டிலிருந்து மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம்..!! பெண்களுக்கு சூப்பர் சான்ஸ்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

எவ்வளவு கடினமாக உழைத்தாலும் வீட்டில் பணத்தை சேமிக்க முடியலயா? அப்ப இது கூட காரணமாக இருக்கலாம்..!

Tue Dec 16 , 2025
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வடக்கு திசை தொழில் மற்றும் வாய்ப்புகளின் திசையாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த திசையில் ஒருபோதும் குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். அதேபோல், இந்த திசையில் கனமான பொருட்களை வைக்கக்கூடாது. ஒரு வீட்டின் வடக்கு திசையில் குப்பைகள் நிறைந்திருந்தால், அந்த வீட்டில் முன்னேற்றம் தடைபடும் என்று வாஸ்து அறிஞர்கள் கூறுகின்றனர். பிரதான வாசல் தான் வீட்டிற்கு ஆற்றலைத் தருகிறது. எனவே, வீட்டின் பிரதான வாசலை முறையாகப் பராமரிப்பது […]
vastu for money

You May Like