“பணம் கட்டினாத்தான் பாட்டு”..!! யூடியூப்பின் புதிய ரூல்ஸ்..!! இலவச பயனர்களுக்கு விழுந்த பலத்த அடி..!!

Youtube Music 2026

டிஜிட்டல் இசை உலகில் முன்னணியில் இருக்கும் யூடியூப் மியூசிக், தனது வருவாயை பெருக்கும் நோக்கில் அதிரடியான சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதுவரை இலவசமாக பாடல்களைக் கேட்டு வந்த பயனர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில், இனி பாடல் வரிகளை (Lyrics) முழுமையாகப் பார்ப்பதற்கு தடைகளை விதித்துள்ளது. மற்ற போட்டி நிறுவனங்களை போலவே, தனது பயனர்களை ‘பிரீமியம்’ சந்தாதாரர்களாக மாற்றும் முயற்சியில் யூடியூப் தற்போது தீவிரம் காட்டி வருகிறது.


சமீபகாலமாக யூடியூப் மியூசிக் செயலியைப் பயன்படுத்தும் இலவச பயனர்களுக்கு ஒரு விசித்திரமான ‘பாப்-அப்’ செய்தி திரையில் தோன்றுகிறது. அதில், ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பாடல் வரிகளைப் பார்க்க வேண்டுமானால், கட்டணம் செலுத்தி ‘யூடியூப் பிரீமியம்’ பதிப்பிற்கு மாற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது இசைப் பிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஸ்பாட்டிஃபை நிறுவனம் இதே போன்ற முயற்சியை கையில் எடுத்து, பயனர்களின் கடும் எதிர்ப்பால் அந்த முடிவைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், யூடியூப் தற்போது அந்தப் பாதையிலேயே பயணிக்கத் தொடங்கியுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய பயனர் தளத்தை இந்தியா போன்ற நாடுகளில் யூடியூப் கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் விளம்பரங்களுடன் கூடிய இலவச பதிப்பை பயன்படுத்துவதையே அதிகம் விரும்புகிறார்கள். இத்தகைய சூழலில், சிறிய வசதிகளுக்கு கூட கட்டணம் வசூலிக்கும் போக்கு, பயனர்களை மற்ற மாற்றுத் தளங்களை நோக்கித் தள்ள வாய்ப்புள்ளதாகத் தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வெறும் வணிக லாபத்திற்காகப் பயனர்களின் விருப்பங்களை கட்டுப்படுத்துவது, நீண்ட கால அடிப்படையில் நிறுவனத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.

Read More : BREAKING | சூடுபிடித்த தேர்தல் களம்..!! ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அதிகாரிகள் இடமாற்றம்..!! தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

CHELLA

Next Post

தொடரும் அட்டூழியம்..! வங்கதேசத்தில் மற்றொரு இந்து நபர் கொடூர கொலை..! தேர்தலுக்கு 3 நாட்கள் உள்ள நிலையில் அதிர்ச்சி சம்பவம்..!

Tue Feb 10 , 2026
வங்கதேசத்தின் மைமென்சிங்கில், ஒரு இந்து தொழிலதிபர் கொல்லப்பட்டார். வங்கதேசத்தில் பிப்ரவரி 12 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.. உயிரிழந்தவர், 62 வயதான சுசென் சந்திர சர்க்கார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. அவர் ஒரு அரிசி வியாபாரி. சுசென் சர்க்கார் தனது கடைக்குள் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஷட்டர்களை மூடிவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும், திரிஷால் காவல் நிலையத் தலைவர் […]
sushen chandra sarkar

You May Like