“பீகார் காற்று இங்கேயும் வீசுகிறதோ என நினைத்தேன்..” கோவையில் பிரதமர் மோடி பேச்சு..!

modi 2

கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது வணக்கம் என்று கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் புட்டபர்த்தி விழாவுக்கு சென்றதால் 1 மணி நேரம் தாமதமானதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்..


மேலும் “ சிறுவயதில் தமிழ் கற்றுக் கொண்டிருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு, நான் இங்கு மேடைக்கு வந்த போது பல விவசாயிகள் தங்களின் துண்டை காற்றில் சுழற்றிக் கொண்டிருந்தனர்.. பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என்று நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன்..

கோவை என்பது கலாச்சாரம், கனிவு, படைப்புத்திறனை தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட பூமி.. கோவையின் இந்த புனிதமான மண்ணில் மருதமலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தலை வணங்குகிறேன். இங்கிருக்கும் ஜவுளித்துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பு அளிக்கக் கூடியது.. கோவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சிபி ராதாகிருஷ்ணன் தற்போது துணை குடியரசு தலைவராக நம் அனைவருக்கும் வழிக்காட்டிக் கொண்டிருக்கிறார்..

இயற்கை விவசாயம் என்பது மிகவும் சிறப்பான ஒன்று.. தமிழ்நாட்டு அனைத்து விவசாயிகளுக்கும் என் வாழ்த்துக்கள்.. நான் இங்கு பல்வேறு அரங்குகளை பார்த்தேன்… ஒருவர் இயந்திர பொறியியல் வேலையை விட்டு விவசாயத்திற்கு வந்திருக்கிறார், ஒருவர் இஸ்ரோ வேலையை விட்டு விவசாயத்திற்கு வந்திருக்கிறார்.. இவர்கள் பலருக்கும் ஊக்கமளிக்கிறார்கள்.. இங்கு வராமல் இருந்திருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்கு தெரியாமல் போயிருக்கும்..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

Breaking : மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1600 உயர்வு..! நகைப்பிரியர்கள் ஷாக்..!

Wed Nov 19 , 2025
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
jewels nn

You May Like