கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினார்.. மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு வரை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம், துரோகத்தை எப்படி ஏற்க முடியும் என டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்திருந்தார்.. தற்போது மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். சென்னையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரை சந்தித்த டிடிவி தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தார்..
இந்த நிலையில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாக கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்..” என்று பதிவிட்டுள்ளார்..



