“தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்காகவும் எப்பவும் துணை நிற்பேன்.. இங்கயும் தவெக கொடி பறக்கும்” விஜய் உறுதி..!

vijay 2

புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.. 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை..


புதுச்சேரியில் ஒரு ஐடி கம்பெனி உருவாக்க வேண்டும் என்ற மத்திய அரசுக்கு இல்லை.. காரைக்கால், ஏனாம், மாஹேவில் முன்னேற்றம் இல்லை, சுற்றுலா தளமான புதுவையில் பார்க்கிங், கழிவறை வசதி கூட இல்லை.. ஒரு அமைச்சர் ஊழல் புகாரில் சிக்கி நீக்கப்பட்டு வேறு அமைச்சர் நியமிக்கப்பட்டு 200 நாள் ஆகியும் அவருக்கு பதவி கொடுக்கப்படவில்லை.

20 லட்சம் பேர் வாழு புதுச்சேரி, மத்திய நிதி குழுவில் இடம்பெறவில்லை.. புதுச்சேரிக்கு போதிய நிதி வரத்து இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டி உள்ளது.. புதுச்சேரி கடனை குறைத்து பொருளாதாரத்தை வளர்க்க போதிய திட்டங்கள் வகுக்க வேண்டும்.. இந்திய அளவில் ரேஷன் கடைகலே இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது.. மற்ற மாநிலம் போல் அரிசி, பருப்பு வழங்கும் முறையை புதுச்சேரியில் சீராக்க வேண்டும்.. காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்துவிடுகிறது.. இந்த நிலை மாற வேண்டும்..

தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காகவும் எப்பவும் துணை நிற்பான்.. வரும் புதுச்சேரி தேர்தலிலும் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும். நல்லதே நடக்கும்.. வெற்றி நிச்சயம்.. நம்பிக்கை உடன் இருங்க..” என்று தெரிவித்தார்.

Read More : Flash : “புதுச்சேரி அரசை பார்த்தாவது தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்.. “ விஜய் பரபரப்பு பேச்சு..!

RUPA

Next Post

மத்திய அரசின் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை.. டிகிரி முடித்தால் போதும்.. 85,000 சம்பளம்..!

Tue Dec 9 , 2025
Job in a central government insurance company.. Just complete a degree.. Salary of 85,000..!
Govt Job 2025

You May Like