திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து, ஆண் குழந்தை பிறந்த பிறகு தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா, கயலூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 30), கடந்த 2015 முதல் 2020 வரை சென்னையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். அதே கடையில் 26 வயது இளம்பெண்ணும் வேலை பார்த்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர், திருமண ஆசைக்காட்டி அந்த இளம்பெண்ணுடன் திருநாவுக்கரசு உல்லாசமாக இருந்துள்ளார். இதற்கிடையே, கொரோனா காலத்தில் இருவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். அப்போது, அந்தப் பெண் கர்ப்பமான நிலையில், 2021ஆம் ஆண்டு இருவருக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த பிறகு, பெண்ணின் வீட்டிற்கு வந்த திருநாவுக்கரசிடம், திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதன் பிறகு அந்த பெண்ணை தவிர்த்து, செல்போன் தொடர்பையும் துண்டித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், திருவண்ணாமலை வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : உங்களுக்கு நோயே வரக்கூடாதா..? அப்படினா இந்த பாரம்பரிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கோங்க..!!