ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..
தவெக தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ தமிழ்நாட்டில் புதியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். ஆட்சி மாற்றத்தை உருவாக்கி விஜய் தலைமையில் தமிழகம் வெற்றி நடைபோடுவதற்கு அயராது உழைப்பேன்.. ஆட்சி பீடத்தில் விஜய்யை அமர வைக்க நிச்சயம் பாடுபடுவேன்..” என்று தெரிவித்தார்..
இதனிடையே ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜய் படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது..



