“நான் நடந்துகூட போவேன்”..!! அமித்ஷாவை சந்திக்க 3 கார்களில் மாறி மாறி சென்றது ஏன்..? எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!!

Stalin Eps 2025 1

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க 3 கார்களில் மாறி மாறி சென்றது ஏன்..? என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நம்பி பிரயோஜனம் இல்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு வர வேண்டிய நிதியை உடனே விடுவிக்க வேண்டும் என்று டெல்லி சென்று மனு அளித்தேன். அவர்கள் உடனடியாக சுமார் ரூ.3,000 கோடியை விடுவித்தார்கள்.

முதலமைச்சர் என்று தப்பட்டம் அடித்துக் கொள்ளும் மு.க.ஸ்டாலினால் இந்த நிதியை பெற முடிந்ததா? சென்னை மெட்ரோ ரயிலுக்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான நிதியையும் மத்திய அரசு விடுவித்துள்ளது. மேலும், மக்களின் பிரச்சனைகளை பட்டியலிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மனுவாக அளித்து, நிதியை விடுவிக்க அதிமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அதனை விட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமி 3 கார்களில் சென்றார் என்று பேசுகிறார்கள். நான் நடந்துகூட போவேன். உங்களை மாதிரி கோடிக்கணக்கில் கொள்ளையடித்தா வைத்திருக்கிறேன்..? டெல்லி விமான நிலையத்தில் இறங்கிய பின் தம்பிதுரை காரில் சென்றேன். அவர் என்னை இறக்கிவிட்டுவிட்டு சென்றதால், அங்கிருந்து வேறு காரில் என் நண்பரை பார்க்கப்பதற்காக ஓட்டலுக்கு சென்றேன்.

பின்னர், நண்பரின் கார் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்றேன். இதில் என்ன நீங்கள் கண்டுபிடித்தீர்கள்..? அவர் என்ன பாகிஸ்தானில் உள்ள அமைச்சரா..? இந்தியாவின் உள்துறை அமைச்சர் தானே. திமுகவுக்கு பதிலாக நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வென்றிருந்தால், அங்கேயே குரல் கொடுத்திருப்போம்” என்று தெரிவித்தார்.

Read More : மும்பை அணிக்கு ஆப்பு வைத்த பஞ்சாப்..!! எங்களிடம் இதுதான் பிரச்சனையே..!! வேதனையில் ஹர்திக்..!!

English Summary

Edappadi Palaniswami has explained why he took turns in 3 cars to meet Home Minister Amit Shah in Delhi.

CHELLA

Next Post

ரூ. 5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை.. ஆயுஷ்மான் கார்டை எப்படி பெறுவது..?

Tue May 27 , 2025
How Senior Citizens Can Get Rs 5 Lakh Free Health Cover
Ayushman Bharat seniopr citizens 2

You May Like