.”
தமிழ் சினிமா மட்டுமின்றி அனைத்து மொழி சினிமாத்துறையிலும் அட்ஜெஸ்மெண்ட் என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.. பல நடிகைகள் தங்களின் காஸ்டிங் கவுச் அனுபவங்கள் பற்றி பகிர்ந்து வருகின்றனர்.. அந்த வகையில் தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு வந்த அட்ஜெஸ்ட்மெண்ட் அழைப்பு குறித்து ஓபனாக பேசி உள்ளார்..
வானத்தைப் போல, அன்னம், மருமகள் போன்ற சன் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் மான்யா ஆனந்த். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தனது சினிமா வாய்ப்புகள் குறித்தும் தான் சந்தித்த அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளார்.. அப்போது பேசிய அவர் “ நடிகர் தனுஷின் டீமில் இருந்து ஷ்ரேயாஸ் என்பவர் எனக்கு மெசேஜ் செய்திருந்தார்.. என்னிடம் ஒரு ஸ்க்ரிப்ட் உள்ளது, பண்ணுறீங்களா என கேட்டார்.. அதற்கு நான் ஓவர் கிளாமரா இருந்தா நடிக்க மாட்டேன், ரொம்ப ரொமாண்டிக்காக இருந்தாலும் நடிக்க மாட்டேன். ஒரு டீசண்டான கேரக்டர் இருந்தால் நடிப்பேன் என்று கூறினேன். அவர் தனுஷ் சார் படமாக இருந்தாலும் பண்ணமாட்டீங்களா? எனக் கேட்டார்.. யார் படமாக இருந்தாலும் பண்ணமாட்டேன் என்று கூறிவிட்டேன்..
தொடர்ந்து அந்த நபர் ‘கமிட்மெண்ட் இருக்கும்’ என்று சொன்னார்.. அப்படின்னா என்ன என்று கேட்டேன். ஹீரோ கூட கமிட்மெண்ட் இருக்கும் என்று சொன்னார்.. நான் அதெல்லாம் பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.. பின்னர் சில நாட்கள் கழித்து இதே போல் இன்னொரு மேனேஜரிடமிருந்து எனக்கு மேசேஜ் வந்தது.. அவரும் தனுஷ் படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறினார்.. ஸ்கிரிப்டையும் எனக்கு அனுப்பினார்..” என்று கூறினார்.
எனினும் நடிகை மான்யா கூறிய இந்த சம்பவங்கள் உண்மையிலேயே தனுஷ் தரப்பில் இருந்து நடந்ததா அல்லது அவரின் பெயரை பயன்படுத்தி வேறு யாரேனும் மோசடிகள் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை.. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு தனுஷின் மேனேஜர் ஷ்ரேயாஸ் இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.. அதில் தனது பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக அவர் கூறியிருந்தார்.. ஒருவேளை நடிகை மான்யா அது போன்ற ஒரு மோசடி வலையில் சிக்கி இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்..



