நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி இருந்தது.. அந்த கடித்ததில் நகராட்சி நிர்வாகத்துறை ஒப்பந்ததாரர்களிடம் கட்சி நிதி எனும் பெயரில் கே.என்.நேரு உதவியாளர்கள் 7.5% முதல் 10% வரை கமிசன் பெற்றுள்ளனர். கழிவறைகள் கட்டியது, தூய்மை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்ததில் லஞ்சம் கைமாறியுள்ளது.
நபார்டு நிதி மூலம் நடைபெற்ற நகராட்சி நிர்வாக பணிகளுக்கும் லஞ்சப்பணம் கைமாறியுள்ளது. கிராம சாலைகள், ஏரிகள், நீர் நிலைகள் தொடர்பான திட்ட ஒப்பந்தத்திலும், தூய்மை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கான ஒப்பந்தத்திலும் லஞ்சம் கைமாறியுள்ளது.
ஒப்பந்தங்களை இறுதி செய்து வழங்கியது முதல் ஒப்பந்தத்திற்கான நிதியை விடுவிப்பது வரை நகராட்சி நிர்வாகத்துறையின் ஒவ்வொரு திட்ட ஒப்பந்தத்திலும் 20 முதல் 25 சதவீதம் வரை லஞ்சப்பணம் கைமாறியுள்ளது.
ரூ.1,020 கோடி லஞ்சம் கைமாறியதற்கான ஆதாரங்கள் 258 பக்கங்களில் 300 புகைப்படங்கள் உள்ளது. லஞ்சத்தை கணக்கீடு செய்த பட்டியல், பணம் கைமாறியது, ஹவாலா பரிவர்த்தனை உள்ளது. லஞ்சம் கைமாறியதற்கான வாட்ஸ்ஆப் சாட் ஸ்க்ரீன் ஷாட்கள் உள்ளது. நாங்கள் கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு போலீஸ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
உடனடியாக வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் லஞ்சம் வசூலித்ததில் போலீஸுக்கும் தொடர்பு என முடிவுக்கு வர நேரிடும்..” என்று அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது..
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.. அதே போல் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் கடுமையாக சாடி இருந்தார்..
இந்த நிலையில் இதுகுறித்து அமைச்சர் கே.என் நேரு விளக்கம் அளித்துள்ளார்.. அதிமுக – பாஜக கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் அவதூறு பிரச்சாரம். நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
மேலும் “ ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசு செய்து வரும் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி வரிசையில் அமலாக்கத்துறையும் சேர்ந்துள்ளது.. அதை ஒன்றிய பாஜக அரசின் ஏவல் துறையாக மாற்றி நாளொரு புகாரும் பொழுதொரு பிரச்சாரமாக என்னை குறிவைத்து தொடர்ந்து அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. மக்கள் பணியாற்ற வந்துள்ள ஒன்றிய அரசின் தூண்டுதலின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறைக்கோ அல்லது அதிமுக – பாஜக கூட்டணியின் அவதூறு பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டோம்..” என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
Read More : ரூ.1,000 கோடி ஊழல்.. உண்மையிலேயே ஸ்டாலினுக்கு மடியில் கனமில்லை என்றால் இதை செய்வாரா? இபிஎஸ் கேள்வி..!



