“விஜய்க்கு எதிராக இறங்கி நின்று பிரச்சாரம் செய்வேன்.. வல்கர் வாரியர்ஸ் பத்தி பேசுறேன்..” ஜூலி மீண்டும் சவால்..!

julie7 1774681926

சமீபத்தில் தவெகவில் இருக்கும் பெண்களை அவதூறாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜுக்கு எதிராக தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.. இதையடுத்து விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிக்பாஸ் ஜூலி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் தவெக நிர்வாகிகள் ஆன்லைனில் அவதூறு பரப்புவது குறித்து விமர்சித்த அவர் விஜய்க்கும் சவால் விடுத்தார்..


அதில் பேசிய ஜூலி “ என்ன அண்ணே.. டிஜிபி ஆபிஸில் போய் புகார் கொடுத்திருக்கிறீர்கள் போல.. நம்ம அதெல்லாம் கொடுக்கலாமா அண்ணேன்.. இப்படி ஒரு கூட்டத்தை வைத்துக் கொண்டு இதெல்லாம் கொடுக்கும் அளவுக்கு நாம் Worth ஆ..? இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? உங்க ஆளுங்க மினி எப்ஸ்டீன் ஃபைல்ஸ் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.. இவர்கள் செய்வது உங்களுக்கு தெரியும் தானே? வல்கர் வாரியர்ஸ் சாரி.. வர்ச்சுவல் வாரியர்ஸ்.. நீங்கள் செய்வதெல்லாம் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே அண்ணே..

சரி.. இது ஒரு ஜனநாயக நாடு ஒரு புது ஆள் வந்தால் இளைஞர்கள் அரசியல்வயப்படுவார்கள் என்ற ஒரு சாப்ட் கார்னர் உங்க மேல இருந்தது அண்ணே.. ஆனால் ஏற்கனவே உங்கள் கட்சியில் யாரும் ஜெயிக்க மாட்டார்கள்.. ஆனால் நீ கூட உன் திரைப்பிம்பம், புகழை வைத்து ஜெயித்துவிடக்கூடாது அண்ணே.. நீ எந்த தொகுதியில் நிற்கிறேன் என்று சொல்லுங்க.. நான் இறங்கி நின்று அங்கு பிரச்சாரம் செய்வேன்.. பெண்களுக்கு எந்தளவுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதை பற்றி நான் பிரச்சாரம் செய்வேன்.. சீக்கிரம் அறிவிப்பு வெளியிடுங்கள் அண்ணே.. நான் வெயிட்டிங்.. நான் வரேன் அண்ணே..” என்று தெரிவித்துள்ளார்..

சமீப காலமகவே விஜய்யையும், தவெகவினரையும் விமர்சித்து ஜூலி வீடியொ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RUPA

Next Post

பாமக ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன் காங்கிரஸில் இணைந்தார்.. ராமதாஸுக்கு அடுத்த ஷாக்..!

Sat Mar 28 , 2026
பாமக ராமதாஸ் அணியின் இளைஞரணி தலைவராக இருந்த ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.. அவர் டெல்லியில் கே.சி. வேணுகோபால் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தந்தை ஜி.கே. மணி தற்போது பென்னாகரம் எம்.எல்.ஏவாக உள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் மகன் தமிழ்க்குமரன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டால் தமிழ்குமரன் அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..
Tamilkumaran Congress 1

You May Like