அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அப்படி செய்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் என்றும் கூறியிருந்தார்.. 10 நாட்களுக்குள் இபிஎஸ் இந்த முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனில், இதே மனநிலையில் உள்ளவர்களை ஒன்றிணைக்க தாங்கள் முயற்சி மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியிருந்தார்..
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆதரவளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முயலும் செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்.. செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் எனக்கு சம்மதம்.. அனைவரையும் ஒன்றிணைக்கும் எண்ணம் கொண்டவர் செங்கோட்டையன்.. அனைவரும் ஒன்றானால் தான் அதிமுக ஆட்சியில் அமரும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.. அவரின் முயற்சி நல்லது தான்..
அதிமுகவின் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் வெற்றி பெற முடியும் என்பது தான் அவரின் கருத்து.. கழகம் ஒன்றிணைய வேண்டும் என்று யார் சொன்னாலும் நாங்கள் பக்கபலமாக இருப்போம்..” என்று தெரிவித்தார்..



