“ஆதவை தவெகவில் இருந்து விலக்கினால் விஜய்க்கு நல்லது.. இல்லன்னா இதுதான் நடக்கும்..” பாஜக நிர்வாகி அட்வைஸ்..!

arjuna moorthy vijay aadhav

நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசிய பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று பேசிய ஆதவ் “ அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் திமுக குடும்பம் மிரட்டியதால், அந்த மிரட்டலுக்கு பயந்து தான் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டார்.. விஜய்யிடம் மனவலிமை இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்..” என்று பேசியிருந்தார்.


அவரின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர். விசிக தலைவர் திருமாவளவன் கூட ஆதவ் பேசியது பொய் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து விஜய்க்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில் “ விஜய் அவர்களுக்கு வணக்கம்.. தங்களின் அரசியல் தொடக்கம் தமிழகம் முழுவதும் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்படுத்திய ஒன்று என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியலில் புதிய குரல்கள் எழுவது ஜனநாயகத்திற்கு நல்லதே. ஆனால் அந்த ஆரம்ப உற்சாகம் அரசியல் புரிதல், அனுபவம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும் அவசியமான உண்மை.

தங்களின் கட்சி நிர்வாகிகள் சிலர், குறிப்பாக திரு. ஆதவ் அர்ஜுன் போன்றவர்கள், அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துக்களால் தேவையற்ற மோதல்களையும் மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். “நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழி போல, தங்களுக்கே ஏற்படும் மரியாதையையும் அவர்கள் பேச்சுகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஒரு அரசியல் இயக்கம் வளர வேண்டுமெனில் அது அறிவு, அனுபவம் மற்றும் பணிவு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டப்பட வேண்டும். அரைகுறை அரசியல் புரிதலுடன் பேசும் நபர்களை கட்சி நிர்வாகத்தில் வைத்துக் கொள்வது எந்த தலைவருக்கும் பலமாக இருக்காது; அது காலப்போக்கில் பெரிய அரசியல் சுமையாக (llability) மாறும்.
அதற்கான ஒரு எடுத்துக்காட்டு என்றால், அவரது செயல்பாடுகள் காரணமாக திரு.தொல்.திருமாவளவன் அவர்களின் கட்சி இருந்த கூட்டணியில் ஏற்பட்ட பின்னடைவு. அந்த அரசியல் சூழ்நிலையே பின்னர் அவரை தங்கள் கட்சியில் சேரும் நிலைக்கு தள்ளியது என்பதை தமிழகம் முழுவதும் அறிந்ததே.

குறிப்பாக, தமிழ் மக்களின் மனதில் மிகுந்த மரியாதையும் பாசமும் பெற்றிருக்கும் நம் அன்புத் தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களை குறைத்து பேசுவது, ஒருவரை உயர்த்தாது. அது தமிழ் மக்களின் உணர்வுகளை மட்டுமே புண்படுத்தும்.

திரு. ரஜினிகாந்த் அவர்கள் அரசியலில் அதிகாரம் பெற்றவர் அல்லாத நேரங்களிலும், துணிச்சலான கருத்துக்களை வெளிப்படையாக கூறியவர். அவரது வாழ்க்கையில் இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன: ஒரு காலத்தில் அதிகாரம் மிகுந்திருந்த சூழலில் கூட அவர் “ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது’ என்று கூறி அரசியல் நிலையை சுட்டிக்காட்டினார்.

அந்த கருத்துக்காக அவர் பல விமர்சனங்களையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டார். இருந்தாலும் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றாமல் தனது கருத்தை வெளிப்படையாக சொல்லும் தைரியம் கொண்டிருந்தார். இந்தியாவிலும் உலக அரங்கிலும் பல தலைவர்களின் மரியாதையைப் பெற்றவர். அவரைப் போன்ற நபரை குறைத்து பேசுவதன் மூலம் யாரும் உயர்வதில்லை. மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும் என்பது அரசியலின் அடிப்படை உண்மை.

எனவே, தங்களின் அரசியல் பயணம் வளர வேண்டும் என்றால், தங்களின் சுற்றத்தில் உள்ள அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை உடனடியாக கட்சியை விட்டு விலக்கி, அரசியல் நாகரிகத்தையும் பொறுப்பையும் முன்னிறுத்த வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். இல்லையெனில், தமிழ் மக்களின் மனதில் உருவாகியிருக்கும் எதிர்பார்ப்பை இழக்கும் அபாயம் ஏற்படும். தமிழக அரசியல் உயர வேண்டும் என்றால்,
பிரிவினை, இகழ்ச்சி மொழி அல்ல தேவை. பொறுப்பான அரசியல் மொழி தான்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிட்ட போது, அவரது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி அறிவிக்கப்பட்டர்.. ரஜினி கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்த பின்னர் அவர் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : இது எவ்வளவு பெரிய கேவலம்..? முதல்வருக்கு இப்பயாவது புரியுதா..? விளாசிய இபிஎஸ்..

RUPA

Next Post

அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்..! விஜய் கடைசி நேரத்தில் டீலுக்கு ஓ.கே சொன்னது எப்படி..? பரபர பின்னணி தகவல்கள்..!

Sat Mar 14 , 2026
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. தேர்தலை முதன்முறையாக சந்திக்க உள்ள தவெக என்.டி.ஏ கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நேற்று ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
vijay amitshah 2

You May Like