அதிமுக வெற்றி பெற்றால் RSS தான் ஆளும்.. அதிமுகவினர் கவனமா இல்லன்னா.. சுய அடையாளத்தை இழக்க நேரிடும்.. திருமாவளவன் எச்சரிக்கை..!

thiruma admk issue

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.. அந்த வகையில் தாய்மொழி தினத்தை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்..


அதில் “ நம் உயிருக்கு நேராம், சமூகத்தின் விளைவுக்கு நீராம், உரிமைச் செம்பயிருக்கு வேராம், உயர்வுக்கு வானாம், பிறவிக்குத் தாயாம், நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை இந்த தாய்மொழி தினத்தில் போற்றி வணங்குகிறேன்… தமிழுக்கும் தமிழருக்கும் அதிமுக என்றென்றும் அரணாக விளங்கும் என்று உறுதியளிக்கிறேன்…” என்று குறிப்பிட்டிருந்தார்..

அந்த பதிவில் காவி உடையில் திருவள்ளுவர் புகைப்படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையானது.. திருவள்ளுவருக்கு காவி உடையா? முழு சங்கியாக மாறிய அதிமுக என்றும் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.. இந்த நிலையில் இபிஎஸ் சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நீக்கி விட்டு, வெறும் வாழ்த்து செய்தியை மட்டும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுக பாஜகவின் பிடிக்குள் எப்போதோ போய்விட்டது.. அது மெல்ல மெல்ல காவி மயமாகி வருகிறது என்பதை நான் எப்போதோ கூறியிருக்கிறேன்.. கவலையை வெளிப்படுத்தி இருக்கிறேன்.. அதற்கு சான்றாக தான் இந்த பதிவும் அமைந்திருக்கிறது.. பெரியார் பாசறையில் தோன்றிய இயக்கம், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் இயங்கிய ஒரு திராவிட இயக்கம், இன்று சங் பரிவார்களின் பிடிக்குள் சிக்கி உள்ளது என்பது கவலை அளிக்கிறது..

அதிமுக வெற்றி பெற்றால், ஆர்.எஸ்.எஸ் தான் நாட்டை ஆளும், அதில் யாருக்கும் ஐயம் தேவையில்லை என்பதை அவ்வப்போது நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன்.. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சமூக வலைதள பக்கத்தில் திருவள்ளுவருக்கு காவி பூசும் வேலையை துணிச்சலாக பதிவு செய்யக்கூடிய அளவுக்கு நிலைமை மாறி உள்ளது. இது வேதனையளிக்கிறது.. அந்த படத்தை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது.. ஆனாலும் அதிமுக தலைவர்கள் கவனமாக எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.. இல்லையேல் அவர்களின் சுய அடையாளத்தை இழக்க நேரிடும் என்பதை அதிமுக மீதுள்ள நன்மதிப்பின் அடிப்படையில் எனது கருத்தாக முன்வைக்கிறேன்..” என்று தெரிவித்தார்..

Read More : திருவள்ளுவருக்கு காவி உடை.. வாழ்த்து பதிவால் வெடித்த சர்ச்சை.. அவசர அவசரமாக பதிவை நீக்கிய இபிஎஸ்..!

RUPA

Next Post

இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள்..! வெற்றி இவர்களுக்கு எளிதில் கிடைக்கும்..! நீங்க எந்த ராசி.?

Sat Feb 21 , 2026
சிலர் தங்கள் புத்திசாலித்தனம், சுறுசுறுப்பு மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனை மூலம் எளிதான வழிகளைக் கண்டுபிடித்து விரைவாக வெற்றியை அடைகிறார்கள். குறுக்குவழி என்பது தவறான வழி அல்ல. நேரம், முயற்சி மற்றும் ஆற்றலைச் சேமிக்க இது ஒரு புத்திசாலித்தனமான வழி. ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே இந்த வகையான மூலோபாய சிந்தனையைக் கொண்டுள்ளனர். கடினமான சூழ்நிலைகளிலும் கூட அவர்கள் எளிதான தீர்வுகளைக் கண்டுபிடித்து வெற்றியை அடைகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் யார் […]
horoscope zodiac

You May Like