சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கூலி. இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்த நிலையில், இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூலி திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படம் உலகளவில் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதேபோல், ரஜினியின் கரியரில் மூன்றாவது ரூ.500 கோடியை தாண்டிய படமாக இது உள்ளது.
இந்நிலையில் தான், கூலி திரைப்படம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இப்படத்தில் ரஜினியின் பிளாஸ்பேக் சீனில் வரும் ரஜினி வாய்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகவும், இது எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “கூலி படம் தொடர்பாக நான் இதுவரை எதுவுமே சொன்னதில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பு இல்லை என்றால் நாங்கள் சினிமாவே பண்ண முடியாது. அதை நாங்கள் குறை சொல்லவும் முடியாது. கூலி படத்தில் டைம் டிராவல் கிடையாது. எல்.சி.யூ. கிடையாது. ரசிகர்களே ஒரு கதையை உருவாக்கினார்கள்.
கூலி படம் வெளியாவதற்கு முன் படத்தின் ட்ரெய்லர் கூட வெளியிடவில்லை. படம் முடிந்து 18 மாதங்கள் அனைத்தையும் மறைத்து வைத்திருந்தேன். ஆனால், ரஜினி சார் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய நான் கதை எழுத முடியாது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் நான் நல்ல இயக்குநர். அது முடியாவிட்டால் முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : ரூ.1,000 உரிமைத்தொகை வருமா..? தற்காலிகமாக நிறுத்திய தமிழ்நாடு அரசு..!! குடும்பத் தலைவிகள் அதிர்ச்சி..!!