2011-ல் அதிமுக கூட்டணிக்கு வைகோ வராமாட்டார் என ஜெயலலிதாவிடம் ஓபிஎஸ் பொய் சொன்னதாக மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று கூறியிருந்தார். அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு ஓபிஎஸ் இன்று பதிலளித்தார்.. இதுகுறித்து பேசிய அவர் “ அம்மா என்ன பேச சொல்கிறாரோ அதை மட்டும் பேசி வந்திருக்கிறேன்.. அவர் சொல்லின் படியே செயல்பட்டு வந்திருக்கிறேன்..
அண்ணன் வைகோ மீது நான் மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன்.. அவர் என்ன பேசினாலும் நான் அவர் மீது அன்போடு, மரியாதையோடு தான் இருப்பேன்.. நான் வைகோவுக்கு சொல்லப்போகும் பதில் அவரின் மனம் புண்படும் என்பதால் நான் அந்த பிரச்சனைக்குள் போகவில்லை.. அவரின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.. ஏனெனில் இது 2011-ல் நடந்த பேச்சு.. கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து இன்று இதுகுறித்து பேச வேண்டிய நிலை வைகோவுக்கு ஏன் வந்தது என்பது தெரியவில்லை.. நான் பதில் சொல்ல வேண்டும் என்று வைகோ விரும்பினால் அதற்கு தான் பதில் சொல்வேன்..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ் “ இன்று அதிமுகவின் மூத்த முன்னோடி செங்கோட்டையன் தான்.. கழகம் ஒன்றுபட வேண்டும். யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா.. செங்கோட்டையன், நான் உள்ளிட்ட பல நிர்வாகிகள் அதிமுக இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது.. இந்த இயக்கத்தை தொண்டர்களுக்காக தான் எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.
அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை மக்களின் இயக்கமாக கொண்டு சென்றார்.. இன்றைக்கு நானும் செங்கோட்டையனும் கழகத்தின் மூத்த தலைவர்களும், தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் கட்சி ஒன்று பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.. செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்..
Read More : அடுத்த செக்..! ஆட்டத்தை தொடங்கிய செங்கோட்டையன்.. இபிஎஸ்-க்கு கடும் நெருக்கடி.. என்ன செய்யப் போகிறார்?



