தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்த பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான ‘கேப்டன்’ விஜயகாந்த், கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். அவரது உயிரிழப்பை ஒட்டுமொத்த தமிழர்களும் தங்களது வீட்டு இழப்பாகவே பார்த்தார்கள். அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பலரும் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் பரதன், தவசி படங்களில் விஜய்காந்திற்கு வில்லனாக நடித்த பொன்னம்பலம் அவர் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அந்த பேட்டிகள் இணையத்தில் வைரலாகிறது. அவர் கூறுகையில், பரதன் பட சூட்டிங். பைட் சீன். விஜயகாந்த் சாருக்கும், எனக்கும் விடிய விடிய சூட் போயிட்டு இருக்கு. காலையில 3 மணிக்கு ஷூட் முடிஞ்சது. ரெண்டு பேரும் செம டயர்டு ஆகிட்டோம். பைட் முடிஞ்சி எனக்கு கல்யாணம். காலை 6 மணில இருந்து 7.30 மணிக்குள் முகூர்த்தம். சம்பளம் தேவைப்படுது. கம்பெனியில கேட்டுட்டு இருக்கேன். ஆனா கொடுக்கல.
வீட்டுக்குப் போய் குளிச்சிட்டு 7 மணிக்கு மண்டபத்துக்கு வரேன். பார்த்தா எனக்கு முன்னாடியே சார் வந்து உட்கார்ந்துட்டு இருக்காரு. நான் ஷாக் ஆகிட்டேன். அவர் வீட்டு கல்யாணம் மாதிரி முன்ன நின்னு பண்ணி ஆசிர்வாதம் பண்ணிட்டு கல்யாண செலவு எவ்ளோ ஆகுதுன்னு சொல்லு தரேன்னு சொல்லிட்டு, கைல 2.30லட்சம் கொடுத்துட்டுப் போனாரு என்கிறார் நடிகர் பொன்னம்பலம்.
விஜயகாந்த் தனது திரைப் பயணத்திலும், அரசியல் வாழ்க்கையிலும் பலருக்கும் உதவி செய்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தனது புகழ் உச்சத்தில் இருந்த போதும் எளிமையாக இருந்த இவர், நெடுங்காலமாக உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 2023ல் மறைந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: தினமும் ஒரு கைப்பிடி இதை சாப்பிட்டால் உங்கள் மூளை கணினி போல வேலை செய்யும்..!!