உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரு வியாபாரியின் குடும்பத்தில் நடந்த விசித்திரமான சம்பவம், தற்போது ஊர் முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. திருமணமாகி ஒரு வருடம் கழித்து, கணவனும் மனைவியின் தங்கையும் காதலித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன், காசிபூரைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு, அம்ரோஹாவைச் சேர்ந்த வியாபாரியின் மூத்த மகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான ஒரே ஆண்டில், மருமகனுக்கும் அவரது மனைவி தங்கையான சாலிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாது என்று உறுதியாக இருந்தனர்.
மேலும், ஒன்றாக வாழ வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தனர். ஒரு கட்டத்தில், சாலி “நான் ஜீஜாவை மட்டுமே திருமணம் செய்வேன்.. இல்லையென்றால், கன்னியாகவே இருப்பேன்” என்று கூறி ஜீஜாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் இரு குடும்பத்தினரும் அதிர்ச்சியில் ஆடிப்போனார்கள்.
இந்த உறவுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சாலியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதற்கிடையே, அக்கா எடுத்த முடிவு அனைவரையும் மேலும் திகைக்க வைத்தது. “என் தங்கையை என் கணவரின் இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயார்” என்று அவர் கூறி பரபரப்பை கிளப்பினார்.
அக்காவின் இந்த முடிவால் ஜீஜாவும் சாலியும் மகிழ்ச்சி அடைந்தாலும், இரு குடும்பத்தினரும் இந்த உறவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அம்ரோஹாவில் உள்ள சமூக விதிமுறைகளுக்கு சவால் விடும் வகையில் அமைந்துள்ளது.
Read More : அப்படிப்போடு..!! கார், ஏசி, டிவி விலை அதிரடியாக குறைகிறது..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!