Flash : “ திமுக கூட்டணிக்குள் ராமதாஸ் வந்தால் விசிக வெளியேறிவிடும்.. தேர்தலை விட இதுதான் முக்கியம்..” திருமாவளவன் திட்டவட்டம்..!

thiruma ramadoss stalin

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. ஒருபுறம் திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்று திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.. தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..


மறுபுறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்கிறது.. ஆனால் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று திமுக உறுதியாக தெரிவித்துள்ளது.. மேலும் ராமதாஸின் பாமக தரப்பும் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைந்தால் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. பாஜக மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்புகிறது.. பாமக சாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தலித்களுக்கு எதிராக பரப்புகின்றனர்..

இந்த மாதிரி சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை விதைத்து பிளவுபடுத்தக் கூடிய, நிலையை பகையை வளர்க்க கூடிய இந்த 2 கட்சிகளோடு எந்த காலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.. இந்த கட்சிகள் இடம்பெறும் அணியில் இடம்பெற மாட்டோம் என்ற முடிவை நாங்கள் ஏற்கனவே எடுத்துவிட்டோம்..

அந்த முடிவை எடுக்க சுதந்திரமும் உரிமையும் எங்களுக்கு இருக்கிறது.. ஆனால் திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை.. திமுக எடுக்கும் முடிவு, எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.. இது தான் எங்கள் நிலைப்பாடு.. இதில் நாங்கள் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.. அவ்வப்போது வரும் தேர்தல்களுக்காக நிலைபாட்டை மாற்றிக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையில் உறுதியாக இருக்கிறோம்.. விசிக மீதான நம்பக தன்மையை இழந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்..” என்று தெரிவித்தார்..

Read More : தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு! நகை பிரியர்களுக்கு ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை என்ன?

RUPA

Next Post

இன்னும் 36 மாதங்கள் தான்.. பூமியில் இல்ல.. விண்வெளியில் இது நடக்கும்.. AI பற்றி எலான் மஸ்க் கணிப்பு..!

Sat Feb 7 , 2026
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், மேலும் ஒரு துணிச்சலான கணிப்பை வெளியிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) நிறுவுவதற்கான மிகக் குறைந்த செலவு இடம் பூமி அல்ல, விண்வெளியே என்றும், இது அடுத்த 36 மாதங்களுக்குள் அல்லது 30 மாதங்களுக்குள் நிகழக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய எலான் மஸ்க், விண்வெளியில் அமைக்கப்படும் ஆர்பிட்டல் டேட்டா சென்டர்கள், பூமியில் மின்சக்தி உற்பத்தியை பெரிதாக்குவதில் […]
elon musk 11zon

You May Like