“ராமதாஸுக்கு ஏதாவது நடந்தால் சும்மா விட மாட்டேன்.. அவர் என்ன எக்ஸிபிஷனா?” அன்புமணி ஆவேசம்!

ramadoss anbumani

ராமதாஸுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் உடன் அவருடன் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று அன்புமணி ஆவேசமாக பேசி உள்ளார்.

சென்னை உத்தண்டியில் நடைபெறும் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் அன்புமணி இன்று உரையாற்றினார்.. அப்போது “ மருத்துவர் ஐயா நலமாக இருக்கிறார்.. மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்கு சென்றார்.. இந்த செக்-அப் திட்டமிட்ட செக்-அப் தான்.. அவர் நன்றாக இருக்கிறார் ஒன்றும் பிரச்சனை இல்லை.. ஆனால் சிலர் ஃபோன் செய்து ஐயாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பாருங்கள் என்று வரவழைக்கின்றனர்.. யார் யாரோ வந்து ஐயாவை சந்தித்து செல்கின்றனர்.. இது என்ன எக்ஸிபிஷனா.. ஐயாவின் உயிர் இது..


நான் இருக்கும் போது யாரும் காரிடர் கிட்ட கூட வரமாட்டார்கள்.. ஐயாவின் பாதுகாப்பு கருதி யாரையும் விடமாட்டேன்.. ஐயாவுக்கு ஏதாவது ஒன்று நடந்தால் உடன் அவருடன் இருப்பவர்களை தொலைத்துவிடுவேன்.. சும்மா விட மாட்டேன்.. நான் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்து ஐயாவை வைத்து டிராமா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..” என்று ஆவேசமாக பேசினார்..

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றதாக தகவல் வெளியானது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.. அதில் இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது என்பது தெரியவந்தது.

இதனிடையே முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சீமான், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்தனர்.. அதே போல் நடிகர் ரஜினிகாந்த் ராமதாஸின் உடல்நிலை போனில் நலம் விசாரித்தார். பின்னர் கடந்த 7-ம் தேதி ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : “அதிமுகவை உள் வாடகைக்கு விட்டுள்ளார் இபிஎஸ்.. பாஜக எத்தனை அடிமைகளுடன் வந்தாலும் ஒன்னும் நடக்காது..” உதயநிதி விமர்சனம்!

English Summary

Anbumani has spoken angrily, saying that if anything happens to Ramadoss, he will not leave those with him alone.

RUPA

Next Post

இசக்கிக்கு பிறந்த பெண் குழந்தை.. ஓடி வந்த சண்முகம்.. உணர்வுபூர்வ தருணங்களுடன் அண்ணா சீரியல்..!!

Fri Oct 10 , 2025
A baby girl is born to Isakki.. Shanmugam comes running.. Anna serial with emotional moments..!!
anna serial 1

You May Like