Flash : “சீமான் நடிகை இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்காவிடில்…” உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!

actress vijayalakshmi 1

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டு, 7 முறை கர்ப்பத்தை கலைத்தார் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த சூழலில் கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அதில், இரு தரப்பும் அமர்ந்து பேசி தீர்வு காண அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. ஆனால், நடிகை தரப்பு சமரசத்திற்கு தயாரில்லை என்று தெரிவித்தது. இதையடுத்து, நீதிமன்றம் இடைக்காலத் தடையை மேலும் 4 வாரங்கள் நீட்டித்தது.

பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக் கோரும் சீமானின் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்தார்.. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடந்த 12-ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.. அப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லாமல் போலி நம்பிக்கை கொடுத்து என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என விஜயலட்சுமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சீமான் மன்னிப்பு கேட்க உத்தரவிட்டனர். மன்னிப்பு கோரும் மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் சீமான் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை ஏற்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சீமானுக்கு எதிராக நடிகை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.. மன்னிப்பு கேட்க ஒப்புக்கொண்டு விட்டு பொதுவெளியில் தன்னை பற்றி சீமான் அவதூறாக பேசுவதாக நடிகை தரப்பு முறையீடு செய்தது.. அப்போது நீதிபதிகள் “ சீமானும் நடிகையும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.. இருவரும் குழந்தைகள் அல்ல என்பதை நினைவில் கொண்டு பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.. சீமான் நடிகை இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்காவிடில் இருவரையும் நீதிமன்றம் வரவைக்க நேரிடும்..:” என்று எச்சரித்தனர்..

Read More : இது நியாயமே இல்ல.. 5 கோடி ஜீவனாம்சம் கேட்ட பெண் மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி..

RUPA

Next Post

தீவு போல் மாறிய நகரங்கள்..!! 18 பேரை காவு வாங்கிய அதிபயங்கர புயல்..!! தைவான், பிலிப்பைன்ஸில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

Wed Sep 24 , 2025
தைவான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு சீன கடற்கரை பகுதிகளில் அதிபயங்கர புயலான ‘ரகசா’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படும் இந்தப் புயல், இதுவரை தைவானில் 14 பேரையும், பிலிப்பைன்ஸில் 4 பேரையும் காவு வாங்கியுள்ளது. இந்த புயலில் மனிதர்கள், கார்கள், சாலைகள் மற்றும் பாலங்களை கூட அடித்துச் செல்லப்பட்டன. ஹாங்காங்கில் கடல்நீர் ஹோட்டல் லாபிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை […]
Taiwan 2025

You May Like