பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் விசாரணை செய்ய தயங்கினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன, அவற்றின் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது என்று அரசு தரப்பு வாதிட்டது. அப்போது நீதிபதி “ பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக இருந்தவர் ஏன் இப்படி பேச வேண்டும்..? அமைச்சராக இருந்தவர் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்.” என்று தெரிவித்தார்.
மேலும் வெறுப்பு பேச்சு தொடர்பான பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய காவல்துறை தயங்கினால் அந்த வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். கருத்து சுதந்திரத்திற்கு கூட கட்டுப்பாடுகள் உள்ளன என்றும் ஆனால் பொன்முடி தேவையில்லாத விஷயங்களை பேசி உள்ளதாகவும் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்..
Read More : கொறடாவை மாற்ற கோரி பாமக எம்.எல்.ஏக்கள் மனு.. தன்னை நீக்க முடியாது என எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..