செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையில், இப்படியே போனால் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழக்கு எப்போதும் முடியப் போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முறையாக தமிழ்நாடு காவல்துறை விசாரிக்க வில்லை என்று மனுதாரர் தரப்பு தெரிவித்தது.. மேலும் 2000-க்கும் அதிமானோர் மீது குற்றச்சாட்டு வைக்கபப்ட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது..
அப்போது நீதிபதிகள் “ ஒவ்வொரு வழக்கிலும் 1000, 2000 பேர் குற்றம்சாட்டப்பட்டோர் இருந்தால் விசாரணை எப்போது முடியும்? லஞ்சம் கொடுத்தவர்கள் என்று குற்றம்சாட்ட ஏழைகளையும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2000 பேரையும் விசாரனை செய்தால் அமைச்சரின் வாழ்நாள் முழுவதும் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வராது.. 2000-க்கும் மேற்பட்டோர் மீது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.. இப்படியே போனால் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழக்கு எப்போதும் முடியப் போவதில்லை..
அமைச்சரை தவிர, இடைத்தரகர்கள் யார் யார்? அமைச்சரின் பரிந்துரையின் பேரில் செயல்பட்ட அதிகாரிகள் யார்? வேலைக்கு எடுக்கும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் யார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.. பணம் பெற்றுக்கொண்டு தேர்வானவர்களுக்கு பணி நியமனங்களை வழங்கிய அதிகாரிகள் யார் என்ற விவரங்களை அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்..
மேலும் “இந்த வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும்.. குற்றம்சாட்டவர்களை சிக்க வைப்பதே உங்கள் முயற்சியாக உள்ளது.. சிஸ்டம் மீதான ஒரு மோசடியாக இதனை கொண்டு வர முயற்சிக்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்..
Read More : “ வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே, தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி..” இபிஎஸ் காட்டம்..