கடந்த 27ஆம் தேதி கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்ற விஜயை பார்க்க வந்தவர்களில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூரில் விஜய் பார்க்க வந்தவர்கள் துடிதுடித்து உயிரிழந்து கொண்டிருக்க, விஜயோ களத்தில் நிற்காமல் சென்னை வந்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. கரூர் சம்பவம் அந்த கட்சிக்கு பெரும் கரும்புள்ளியாக மாறியது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலான்யவு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்புகள் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் பின்னடைவாக மாறியது. அதிலிருந்து தமிழக வெற்றி கழகம் தற்போது மீண்டு வருகிறது. சம்பவம் நடந்த 16 நாட்களுக்கு பிறகு கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் விஜய் சந்திக்க உள்ளார்.
இதனிடையே தவெகவில் இருந்த நடிகர் தாடி பாலாஜி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுய அவர், கரூர் சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் விஜய்க்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்துள்ளது. அவர் மிகப்பெரிய மன உளைச்சலில் இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக விஜய் பேசினால், அது பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும். விரைவில் மறைக்கப்பட்ட உண்மைகளை விஜய் வெளிப்படுத்துவார்.
மேலும் அவர் தொடர்ந்து கூறியதாவது: “தவெகவில் 2ஆம் கட்டத் தலைவர்களை உண்மையான விசுவாசிகளாக நியமித்திருந்தால், கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது. விஜய்க்கு நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும். பதவி பெற்று செயல்படாமல் இருப்பது தவறு,” என்றார். அதுடன், “விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென நான் கோரிக்கை வைப்பேன்,” என்றும் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.
Read more: டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!. நவ.10முதல் சேவையை தொடங்குகிறது இண்டிகோ!.